azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Udhaseena(detachment marked by renunciation) is a state that is neither complacence nor indifference. It means detachment from good as well as bad. I will explain this with an illustration: When a thorn gets into your foot, you use another thorn to remove the first one. After this you will have to discard both the thorns. You should not keep with you the second thorn though it has helped you in removing the first thorn. This is how you must gradually renounce the good and the bad. We should gradually cut down our relationship with the world. Most importantly do not enter into activities that induce unnecessary relationships, for that will prove detrimental to one’s welfare.(Divine Discourse, Oct 10, 1997.)
உதாசீனம்( துறவு மனப்பாங்குடன் கூடிய பற்றின்மை) என்பது மனநிறைவோ அல்லது அக்கறையின்மையோ கொண்ட நிலை அல்ல.நல்லவை,கெட்டவை என்ற இரண்டிலிருந்தும் பற்றற்று இருப்பது என்பது இதன் பொருள்.இதை ஒரு எடுத்துக் காட்டுடன் விளக்குகிறேன்;ஒரு முள் உங்கள் பாதத்தில் குத்தி விட்டால், அதை மற்றொரு முள்ளைப் பயன்படுத்தி விலக்குகிறீர்கள்.இதன் பிறகு, நீங்கள் அந்த இரண்டு முள்ளையும் தூக்கிப் போடத்தான் வேண்டும். முதல் முள்ளை எடுப்பதற்கு உதவியே என்று,இரண்டாவது முள்ளை நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.இப்படித் தான் நீங்கள்,நல்லவை மற்றும் கெட்டவை என்ற இரண்டையும் படிப் படியாகத் துறக்க வேண்டும்.நாம் படிப்படியாக இந்த உலகுடன் உள்ள உறவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக, தேவையற்ற உறவுகளை ஏற்படுத்தும் செயல்களில் இறங்காதீர்கள்; ஏனெனில், அவை ஒருவரது நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.