azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The subtle effect ofmantras(mystic formulae) mentioned in the Vedas cannot be seen or heard by the senses; they have to be experienced in and through the inner consciousness, theAnthahkarana. The sound of these mantras has the power to transform the impulses and tendencies. The wordmantrameans ‘that which saves when turned over in the mind’. Repeating themantraconstantly in the mind will keep off wild talk, purposeless conversation, aimless gossip and scandal. Talk only when the talk is most essential and talk only as little as is necessary. Talk sweetly and without any reservations or circumvention. I want all to be convinced of the excellence of these teachings of the Vedas andShasthras(scriptures (Divine Discourse, Mar 21, 1967).
வேதங்களில் கூறப்பட்டுள்ள மந்திரங்களின் நுட்பமான பலன்களை புலன்களால் காணவோ, கேட்கவோ முடியாது; அவற்றை அந்தராத்மாவின் உள்ளும்,மூலமாகவும் தான் அனுபவிக்க முடியும்.இந்த மந்திரங்களின் ஒலி உணர்வுகளையும்,உந்துதல்களையும் மாற்றும் சக்தி கொண்டது. மந்திரங்கள் என்றால்,'' மனதில் திரும்பத் திரும்ப ஜபிப்பதால், காப்பவை'' எனப் பொருள். இடையறாது மந்திரங்களை மனதில் ஜபிப்பது, மனதை வெட்டிப் பேச்சு, வேண்டாத வாக்குவாதம், குறிக்கோளற்ற வம்பு மற்றும் அவதூறுகளிலிருந்து விலக்கி வைக்கிறது. மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே பேசுங்கள்;எந்த அளவு குறைவாகப் பேச வேண்டுமோ,அந்த அவசியமான அளவே பேசுங்கள். மனத்தடைகளோ அல்லது சுற்றி வளைப்போ இன்றி , இனிமையாகப் பேசுங்கள். வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் இந்த அருமையான போதனைகளின் சிறப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.