azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

External cleanliness, devoid of internal cleanliness is nothing short of deceitfulness. Internal cleanliness is more essential than external cleanliness. Though a cup may be clean and attractive outside, we cannot drink water from it, if it is unclean inside. Food cooked in copper vessels turns poisonous, if the vessel does not have a silver coating inside. Hence, observe internal cleanliness with meticulous care. Strive to remain free from the diseases of hatred, bad thoughts and vicious practices. God has gifted you this human body for achieving excellence in your daily life and attaining proximity with Divinity. Cultivate spirituality, acquire spiritual traits, attain proximity to the Divine and merge in Him. This must be your firm resolve. You can achieve this by sanctifying your body with sacred actions, until your last breath.(Divine Discourse, Oct 10, 1997.)
அகத்தூய்மை அற்ற, புறத் தூய்மை வெறும் ஏமாற்று வேலையாகும். புறத்தூய்மையை விட,அகத் தூய்மை மிகவும் இன்றியமையாதது.ஒரு கோப்பை கவர்ச்சியாகவும் வெளிப்புறத்தில் தூய்மையாகவும் இருந்தாலும் கூட, அதன் உட்புறம் அழுக்காக இருந்தால்,நாம் அதிலிருந்து நீர் அருந்த முடியாது. தாமிரப் பாத்திரத்தின் உட்புறம்,ஈய முலாம் பூசப் படவில்லை என்றால், அதில் சமைக்கப் பட்ட உணவு விஷமாக மாறி விடுகிறது. எனவே, அகத்தூய்மையை மிகக் கவனமாக கடைப் பிடியுங்கள்.வெறுப்பு, கெட்ட எண்ணங்கள் மற்றும் கொடிய செயல்கள் என்ற வியாதிகள் வராமல் இருக்கப் பாடுபடுங்கள்.இறைவன் உங்களுக்கு இந்த மனித உடலை, தினசரி வாழ்க்கையில் உயர்வை அடைவதற்காகவும், இறைவனது அருகாமையைப் பெறுவதற்காகவும், பரிசாக அளித்துள்ளான். ஆன்மீகத்தை வளர்த்துக் கொண்டு, ஆன்மீக குணங்களைப் பெற்று, இறைவனது அருகாமையை அடைந்து,அவனுடன் ஒன்றரக் கலந்து விடுங்கள். இதுவே உங்களது தீர்மானமான ஸங்கல்பமாக இருக்க வேண்டும். இறுதி மூச்சுவரை,உங்களது உடலை புனிதமான செயல்களால் தூய்மைப் படுத்துவதன் மூலம், நீங்கள் இதை அடைய முடியும்.