azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Mantrameans that which saves, when meditated upon. The Name of God, any one of His countless ones, can serve the purpose. The Name is like the goad that can tame the elephant in rut, make it bend its knees and lift the log on to its tusks. Liberation (Moksha) is not a five-star hotel, or a deluxe tourist home. It is just the awareness of your reality and the rejection of all contrary conceptions. You can recognise your Self quickly and clearly, if you purify your heart with amantraor by the singing of the glory of God. Both will grant you that boon. Sing from the heart, conscious of the layers of meaning that each word has. These are the surest ways to have God firmly installed in the throne of your hearts and it will redeem your lives.(Divine Discourse, Oct 6, 1970.)
'' மந்திரா'' என்றால்,அதை தியானிக்கும் போது அது நம்மைக் காக்கிறது என்று பொருள்.இறைவனின் எண்ணிலடங்காக நாமங்களில் எது வேண்டுமானாலும், இதற்கு உகந்ததே.இந்த இறைநாமம்,மதம் பிடித்த யானையை அடக்கி,அதை மண்டியிடச் செய்து,தனது தும்பிக்கையால், மரத்துண்டுகளைத் தூக்கச் செய்ய வைக்கும், அங்குசம் போன்றது . மோக்ஷம் என்பது ஒரு 5 நக்ஷத்திர ஹோட்டலோ அல்லது வசதிகள் நிறைந்த யாத்திரீகர் விடுதியோ அல்ல.அது உங்களது உண்மை நிலையின் விழுப்புணர்வும், அதற்கு எதிரான மற்றைய அனைத்து சித்தாந்தங்களையும் ஒதுக்கி விடுவதும் ஆகும். மந்திரத்தினாலோ அல்லது இறைவனது மகத்துவத்தைப் பாடுவதினாலோ உங்களது இதயத்தைத் தூய்மைப் படுத்திக் கொண்டு விட்டால், நீங்கள் உங்களது உண்மை நிலையை தெளிவாகவும், விரைவாகவும் உணர முடியும். ஒவ்வொரு வார்த்தையின் பல அடுக்கு அர்த்தங்களைப் புரிந்து கொண்டு இதய பூர்வமாகப் பாடுங்கள்.இவையே இறைவனை உங்களது இதய சிம்மாசனத்தில் நிலையாக,கொலு வீற்றிருக்கச் செய்ய வல்ல நிச்சயமான வழிகள்;அதுவே உங்களுக்கு ஜன்ம சாபல்யத்தையும் தரும்.