azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The ascend to a human form has been made possible for you all; but you will truly be deserving of this high status among the animals, only by finally merging in the Divine. That is the goal which the pilgrimage of evolution has in view since life began on earth as the amoeba on the waters. Faith in that goal and steady march towards it, are the signs of one being aware of the responsibility of being a human. The Call of the Divine echoes in every heart; it provokes the reaction of awe, reverence, affection, love and sacrifice - all ingredients of devotion (bhakthi). It translates itself into acts of worship, of praise, of adoration and of rituals. The mind through these means gets saturated with divine thoughts and is recast in the divine mould, until the flow of bliss (Aananda) is unabated. (Divine Discourse, Oct 6, 1970.)
உங்கள் அனைவருக்கும் மனிதப்பிறவி என்ற உயர்நிலை அடைவது சாத்தியமாக்கப் பட்டு உள்ளது;ஆனால், இறுதியில் இறைவனோடு ஒன்றரக் கலந்தால் மட்டுமே, விலங்குகளுக்கு மத்தியில்உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த உயர் நிலைக்கு உண்மையில் தகுதி உள்ளவர்களாக நீங்கள் ஆவீர்கள். தண்ணீரில் ஒரு செல் உயிரான அமீபா என்று இந்த பூமியில் ஜீவராசிகள் துளிர் விட்ட நாளிலிருந்து, பரிணாம வளர்ச்சி என்ற புனித யாத்திரையின் குறிக்கோளே அதுதான்.அந்த குறிக்கோளில் நம்பிக்கை மற்றும் அதை நோக்கிய சீரான பயணமே, மனிதனாக இருப்பதன் பொறுப்பை ஒருவர் உணந்திருப்பதற்கான அறிகுறிகள். இறைவனது அறைகூவல் ஒவ்வொரு இதயத்திலிருந்தும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது; அது பக்தியின் தேவைப் பொருட்களான பிரமிப்பு, பணிவு, பரிவு, ப்ரேமை மற்றும் தியாகம் என்ற எதிர் விளைவுகளைத் தூண்டுகிறது. அதுவே வழிபாடு, போற்றுதல், புகழ்தல் மற்றும் சடங்குகளின் செயல்பாடுகளாக உருமாறுகிறது. இந்த முறைகளால் மனம், தங்கு தடையற்ற ஆனந்த நீரோட்டத்தைப் பெறும் வரை, தெய்வீக எண்ணங்களால் நிரப்பப்பட்டு, தெய்வீக அச்சில் வார்க்கப் பட்டுகிறது.