azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Today while Science is making rapid strides, morally people are going down. Selfishness and self-interest dominate every one of the many activities. The unlimited proliferation of desires is the root cause of people’s misery and ruination. If you follow two main principles, you can reach the goal of human life:Sarva jiva namaskaaram Keshavam prathi gachathi- the reverence shown to every being reaches God.Sarva jiva thiraskaaram Keshavam prathi gachathi- similarly, insult to any beings amounts to insulting God. Understand and internalize the Omnipresence of the Lord. In the Gita, Krishna declares that sacrificing the fruits of your actions is the best and easiest way of realizing God. Sacrifice (Thyaga) is the only means of attaining liberation. Serve the society, help the poor and needy in distress, and manifest the human quality of compassion. (Divine Discourse, Sep 4, 1994.)
இன்று விஞ்ஞானம் அதி வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், மனிதர்கள் ஒழுக்கத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு செயலிலும், சுயநலமும் ,சுய அக்கறையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.ஆசைகள் கட்டுக் கடங்காது பெருகி இருப்பதே மனிதர்களின் துயரத்திற்கும்,அழிவிற்கும் மூல காரணம்.நீங்கள் இந்த இரண்டு முக்கிய கோட்பாடுகளை பின்பற்றினால் மனித வாழ்க்கையின் இலக்கை எட்ட முடியும்-அதாவது '' ஸர்வ ஜீவ நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி ''- ஒவ்வொரு ஜீவராசிக்கும் நீங்கள் அளிக்கும் மரியாதை, இறைவனையே சென்று அடைகிறது; '' ஸர்வ ஜீவ திரஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி ''-அதைப் போலவே, எந்த ஜீவராசியை,நீங்கள் அவமதித்தாலும் அதுவும் அந்த இறைவனையே அவமதிப்பது போலாகும். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் என்பதை புரிந்து கொண்டு அதை உள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையில், உங்களது செயல்களின் பலன்களையும் தியாகம் செய்வதே இறைவனை உணர்வதற்கான சிறந்த மற்றும் எளிய வழி என பறைசாற்றுகிறார்.தியாகம் மட்டுமே, மோக்ஷத்திற்கான ஒரே வழி.சமுதாயத்திற்குச் சேவை ஆற்றி, துன்பத்தில் வாழும் ஏழை,எளியவருக்கு உதவி புரிந்து,மனித குணமான கருணையை வெளிப் படுத்துங்கள்.