azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

What exactly is Truth? Is it the description of a 'thing seen' as one has seen it, without exaggeration or under-statement? No. Or, the narration of an incident in the same word as one has heard it narrated? No. Truth elevates; it holds forth ideals; it inspires the individual and society. It is the Light that illumines one’s path to God. A life inspired by Truth will enable man to live as man - not degrade oneself to the status of a lower species. There is God everywhere and there is no second entity. God is the Truth, the only Truth. God is in every article or thing, as the basis, as understanding and understandability, as the source of Divine light, as Atma. Truth is the One Awareness, the One Divine Energy that activates every living being, nay, every particle of matter.(Divine Discourse, Dec 8, 1979.)
சத்யம் என்றால் என்ன? ஒருவர்,தான் '' கண்டதை '',கூட்டியோ,குறைக்காமலோ அப்படியே விவரிப்பதா? இல்லை. அல்லது ஒருவர் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி தனக்கு விவரிக்கப் பட்டதை அதே சொற்களால் விவரிப்பதா? இல்லை. சத்யம் மனிதரை உயர்த்துகிறது;அது உயர்ந்த கோட்பாடுகளை நிலை நிறுத்துகிறது; அது தனி மனிதர் மற்றும் சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. அது, ஒருவர் இறைவனை நோக்கிச் செல்லும் பாதைக்கு ஒளியூட்டும் ஜோதியாகும். சத்யத்தால் உத்வேகம் பெற்ற ஒருவரது வாழ்க்கை மனிதனை, தன்னை கீழ்தரமான ஜீவராசிகளின் நிலைக்குத் தாழ்த்தி விடாமல் மனிதனாக வாழச் செய்கிறது. எங்கும் இருப்பது இறைவன் மட்டுமே வேறு எதுவும் இல்லை. இறைவனே சத்யம்,இறைவன் மட்டுமே சத்யம்.இறைவன் ஒவ்வொரு பொருளிலும் ,ஆதாரமாக,புரிதல் மற்றும் புரிந்து கொள்ளும் தன்மையாக, தெய்வீக ஒளியின் மூலமாக,ஆத்மாவாக இருக்கிறான். சத்யமே ஒவ்வொரு ஜீவராசியையும், ஏன், ஒவ்வொரு அணுவையும் இயக்கும் ஒரே தெய்வீக சக்தியான பரமாத்மாவாகும்.