azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop faith in yourselves, so that you can stand like a rock braving the rushing waters of the flood of negation. That faith will make you overcome the changing circumstances of the outer world. Keep the flame of detachment (vairagya) burning with tiny sticks until it grows into a big bonfire; welcome all chances to develop discrimination (viveka). Take the Name of the Lord and repeat it always. Sing to the Lord with faith and enthusiasm. Let the whole environment reverberate with the devotion you put into every Name that you sing. The Lord’s Name promotes comradeship and establishes concord; it stills all storms and grants peace. Become a blossom, exude the fragrance ofseva(selfless service) andprema(love); then you will find a place in the garland that adorns the Lord. (Divine Discourse, Jul 10, 1959.
பெருக்கெடுத்து ஓடி வரும் எதிர்மறை எண்ணங்களின் வெள்ளத்தின் முன் நிலையான பாறை போல் நிற்பதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.அந்த நம்பிக்கையால்,வெளி உலகின் மாறிக் கொண்டே வரும் சந்தர்ப்பங்களையும் நீங்கள் சமாளிக்க முடியும். வைராக்யத்தின்(பற்றின்மை) பிழம்பை , சிறு குச்சிகளால் அது காட்டுத் தீயாக உருவாகும் வரை எரிய வைத்துக் கொண்டு இருங்கள்; விவேகத்தை வளர்க்கக் கூடிய அனைத்து வாய்ப்புக்களுக்கும் வரவேற்பு அளியுங்கள்.இறைவனது நாமஸ்மரணையை எப்போதும் செய்யுங்கள். நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் இறைநாம ஸங்கீர்த்தனம் செய்யுங்கள்.நீங்கள் பாடும் ஒவ்வொரு இறை நாமத்திலும் நீங்கள் காட்டும் பக்தியால் அனைத்து சுற்றுச் சூழளும் அதிரட்டும். இறைவனது நாமம் நட்பை வளர்த்து,இசைவை நிலை நாட்டுகிறது; அனைத்து மனப் புயல்களையும் தடுத்து, சாந்தியை அளிக்கிறது. மலராக மலர்ந்து, தன்னலமற்ற சேவை மற்றும் ப்ரேமையின் நறுமணத்தை வெளிப்படுத்துங்கள்; பின்னர் இறைவனுக்கு சூட்டப்படும் மாலையில் ஒரு இடத்தைப் பிடிப்பீர்கள்.