azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

There was a man from Puttaparthi who lived in a solitary hut on the banks of the Ganga. He was engaged in severe penance and was admired by other monks. One day, while bathing in the river, he overheard a party of pilgrims who had just alighted from the bus, talking in Telugu. His attachment to his mother tongue dragged him; He asked them where they came from. Slowly, he gathered that they were from Anantapur District, Penukonda Taluk. His ears ached for further details. When they said they were from Puttaparthi, the monk was elated and began enquiring about his lands, family and friends. When he learnt that a few of them had passed away, he started weeping! All his years of penance broke down before the onslaught of language-attachment! Practice detachment from now on, slowly and steadily! Do not continue to add things that bind you to them. Bind yourself to the great liberator, God.(Divine Discourse, Oct 15, 1964.)
கங்கைக் கரையில் ஒரு தனிக் குடிசையில்,புட்டபர்த்தியிலிருந்து சென்ற ஒரு மனிதர் வசித்து வந்தார்.அவர் கடுமையாகத் தவம் புரிந்து வந்தார்;பிற தவசிகளும் அவரைப் பெரிதும் மதித்து வந்தனர்.ஒருநாள்,நதியில் குளித்துக் கொண்டு இருக்கும் போது,பஸ்ஸில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்த ,சில யாத்திரீகர்கள் தெலுங்கில் பேசுவது காதில் விழுந்தது.தாய் மொழியில் அவருக்கு இருந்த பற்றுதல் அவரை அவர்கள் பால் ஈர்த்தது;அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று அவர் கேட்டார்.மெதுவாக,அவர்கள் அனந்தப்பூர் ஜில்லாவில், பெனுகொண்டா தாலுக்காவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலைச் சேகரித்து விட்டார்; அவரது செவிகள் மேலும் விவரங்களை அறியத் துடித்தன. எப்போது,அவர்கள் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததோ,அந்த சந்தியாசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை; அவர் தனது நிலங்கள்,குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார். அவர்களில் சிலர் இறந்து விட்டார்கள் எனத் தெரிந்தவுடன், அவர் அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார்!அவரது பல வருட தவம் மொழிப் பற்றுதலின் அடிக்கு முன் உடைந்து போய்விட்டது!இப்போதிலிருந்தே பற்றின்மையை மெதுவாகவும் ,சீராகவும் பழக்கிக் கொள்ளுங்கள்!உங்களை கட்டுக்குள் வைக்கும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகாதீர்கள். உங்களை மிகச் சிறந்த,பந்த விமோசனம் தரும் இறைவனுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.