azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

It is to clear the path of spiritual progress of mankind that the Lord incarnates from time to time. The restlessness (ashanthi) in which man is immersed has to be curbed. That is what is meant by, the declarationparithraanaaya saadhoonam- ‘the saving of the good’; the saving of individual beings from the tentacles of restlessness caused by want of knowledge, of the relative unimportance of worldly things. All beings must get peace and true happiness; that is the mission on which the Lord comes again and again on this earth. He selects a place full of holiness and takes on the human form, so that you may meet and talk to Him, understand and appreciate, listen and follow, experience and benefit. (Divine Discourse, Jul 10, 1959.)
மனித குலத்தின் ஆன்மீகப் பாதையின் முன்னேற்றத்தைச் சரி செய்வதற்காகவே, இறைவன் யுக,யுகமாக அவதாரம் எடுக்கிறான். மனிதன் மூழ்கியுள்ள,அமைதியின்மையைத் தடுத்தாக வேண்டும்.'' பரித்ரானாய ஸாதூனாம் '' ( நல்லவர்களைக் காப்பதற்காக ) என்ற வாக்கியத்தின் பொருளே, உலகியலான பொருட்களின் முக்கியத்துவம் அற்ற தன்மையைப் பற்றிய அஞ்ஞானத்தினால் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் பிடிகளிலிருந்து தனி மனிதர்களைக் காப்பது என்பதாகும். அனைத்து ஜீவராசிகளும் உண்மையான சாந்தி,சந்தோஷங்களைப் பெற வேண்டும்;அந்த அவதாரப் பணிக்காகவே, இறைவன் மீண்டும்,மீண்டும் வருகிறான். நீங்கள் அவனைச் சந்தித்து, உரையாடி, புரிந்து கொண்டு,ரசித்து, கேட்டு, பின்பற்றி, அனுபவித்து பயன் அடைவதற்காகவே புனிதத்துவம் நிறைந்த திருத் தலத்தைத் தேர்ந்தெடுத்து, மனித உருவெடுத்து அவன் வருகிறான்.