azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Thejeevi(individual soul) has come to this birth in order to reveal the splendour of the spark of Godhead which It is. A rat is attracted by strong smelling cheap little stuff inside the trap; it neglects all other articles of food in the granary, and thus falls a prey to its own foolishness. Similarly people disregard and waste their life in the pursuit of mortal riches. Be aware and alert. Live in the world but develop the skills to wonder and discriminate between the eternal and temporary. Learn to see through this drama and discover the Director behind the scenes, who is none else than God. You can easily develop these skills through devotion (Bhakthi), based on performing duty without any expectation of results(Nishkama Karma).(Divine Discourse, Jul 10, 1959.)
தெய்வீகத்தின் ஒளிக்கீற்றாக இருக்கும் ஜீவாத்மா தனது பிரகாசத்தினை வெளிப்படுத்துவதற்காக,இந்தப் பிறவி எடுத்து வந்துள்ளது. ஒரு எலி பொறியில் இருக்கும் அதிகமான வாசம் வீசும் மலிவான பொருளால் ஈர்க்கப் படுகிறது;களஞ்சியத்தில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் உதாசீனப்படுத்துகிறது;அதன் காரணமாக தனது முட்டாள்தனத்ததால் மாட்டிக் கொள்ளுகிறது. அதைப் போலவே, மனிதர்களும் அழியப் போகும் செல்வங்களில் நாட்டம் கொள்வதன் மூலம் தங்களது வாழ்க்கையை புறக்கணித்து, வீணாக்கிக் கொள்கிறார்கள்.இதை உணர்ந்து கவனமாக இருங்கள். உலகத்தில் வாழுங்கள்; ஆனால் நிலையானவை மற்றும் நிலையற்றவையை ஆராய்ந்து பகுத்தறியும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த நாடகத்தை ஊடுருவிப் பார்க்கக் கற்றுக் கொண்டு, இதன் காட்சிகளின் பின்னால் இயக்குனராக இருக்கும் இறைவனைக் கண்டு கொள்ளுங்கள்.இந்த திறன்களை, பலன்களை எதிர்பாராது செயலாற்றுவதை ( நிஷ்காம கர்மா ) அடிப்படையாகக் கொண்ட பக்தியின் மூலம், நீங்கள் எளிதாக வளர்த்துக் கொள்ள முடியும்.