azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Repentance saves even sinners from perdition. No ceremony of expiation is as effective as sincere repentance. The shopkeeper may give short measure at times, but he will never accept less money; the bill always has to be settled in full. Pay it through repentance. You cannot deceive the Lord with insincerity. Unless you correct yourself through detachment and sacrifice, you cannot reach God. The Lord can be understood, only if you approach Him, develop attachment to Him, have unswerving loyalty to Him and have full faith in Him. You will easily understand Him when you feel that you are but the instrument and He wills every little movement, everywhere. Give up egoism in full, and develop faith. Then you can most certainly see Him. (Divine Discourse, Oct 12, 1964.)
செய்த தவறுக்கு வருந்துவது பாவிகளைக் கூட அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.தவறுக்குப் பரிகாரம் செய்வதற்கான எந்த சடங்கும், உளமார்ந்த வருத்தத்தை விட அதிக பயனளிப்பதில்லை. கடைக்காரர் சில சமயம் பொருளின் அளவைக் குறைத்து அளிக்கலாம்,ஆனால் ,அவர் ஒரு போதும் பணத்தைக் குறைத்து ஏற்றுக் கொள்ள மாட்டார். பில்லை முழுமையாகக் கொடுத்துத் தீர்க்கத் தான் வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று செய்வதால் நீங்கள் இறைவனை ஏமாற்ற முடியாது.பற்றின்மை மற்றும் தியாகத்தால் உங்களை,நீங்களே திருத்திக் கொள்ளவில்லை என்றால், இறைவனை நீங்கள் அடையவே முடியாது.இறைவனை அணுகி, அவன் மீது பற்று கொண்டு, அவன் மீது குலையாத விசுவாசம் வைத்து, அவன் மீது முழு நம்பிக்கை வைத்தால் தான் அவனை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.நீங்கள் ஒரு கருவியே;எங்கும்,எந்த ஒரு சிறு அசைவையும் அவனே தீர்மானிக்கிறான் என்று நீங்கள் உணரும்போது அவனை எளிதில் புரிந்து கொண்டு விடுவீர்கள்.அஹங்காரத்தை முழுமையாக விட்டு விட்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர், நீங்கள் அவனைக் கண்டிப்பாகக் காண முடியும்.