azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 20 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 20 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The master of the house makes all the elaborate arrangements for a marriage in the family. He plans meticulously for the wedding ceremony, the reception, the menu, the illumination, the music, the decoration, etc.. These are very exciting when they are being planned and even while they are executed. But in the end when the bills arrive, will the master still be happy? In quite a few places, after the event is done, there may even be angst, disgust and grief. Isn’t it known from such experience that there is more joy in the actual doing than in the result that accrues. So it must be easy to discard the fruits of action, provided you spend some thought on the process ofkarma(performing action), and the worth of its fruit. (Divine Discourse, Jul 10, 1959.)
ஒரு குடும்பத் தலைவர்,தனது குடும்பத்தில் நிழப்போகும் ஒரு திருமணத்திற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்கிறார்.திருமண விழா, வரவேற்பு, விருந்துப் பட்டியல்,விளக்குகள், அலங்காரங்கள்,இன்னிசை எனப் பல விஷயங்களை கவனமாகத் திட்டமிடுகிறார்.இவை அனைத்தும், திட்டமிடும் போதும், ஏன் அவற்றை நிறைவேற்றும் போதும் கூட உற்சாகம் அளிப்பதாக இருக்கின்றன. இறுதியில், அவற்றிற்கான செலவுகளைக் கொடுக்க வேண்டிய நேரத்தில்,அந்தக் குடும்பத் தலைவர் இன்னும் மகிழ்ச்சியுடன் இருப்பாரா? சில இடங்களில், நிகழ்ச்சி முடிந்த பிறகு மனக்கவலை, அருவருப்பு மற்றும் துயரம் தான் மிஞ்சி இருக்கும். இப்படிப் பட்ட அனுபவத்திலிருந்து, ஒரு செயலை ஆற்றும் போது கிடைக்கும் சந்தோஷம் அதனால் ஏற்படும் விளைவுகள் தரும் சந்தோஷத்தை விட அதிகமானது என்பது புரிகிறது அல்லவா? எனவே, ஒரு கர்மாவை ஆற்றும் முறையிலும், அது தரும் பலன்களின் மதிப்பைப் பற்றி ஆராய்வதிலும், நீங்கள் சிறிது சிந்தனையைச் செலவிட்டால், கர்மாவின் பலன்களைப் பற்றிக் கவலைப் படுவதை விட்டு விடுவது எளியதாகி விடும்.