azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Your duty (Karma) has to be done righteously (indharma). Those dominated by ignorance (Thamas) do their duty solely for the sake of the fruits thereof and they resort to all sorts of subterfuges in order to gain the results they desire. For this category of people, the end justifies the means. Those dominated by passion (Rajas) are proud and pompous, and boast that they are the doers, the benefactors and the experiencers. Those dominated by qualities of calm serenity (Sathwa) do their duties regardless of the fruits thereof and leave the result to the Lord. They will not worry whether it leads to success or failure, ever conscious of their duties and never of their rights. As a matter of fact, there is more joy in the actual doing, than in the result that accrues. This attitude must be the experience of every true seeker. (Divine Discourse, Jul 10,1959.)
உங்கள் கர்மாவை, தர்ம வழியில் ஆற்ற வேண்டும்.தாமஸ குணம் கொண்டவர்கள் அதாவது அறியாமையால் கவரப்பட்டவர்கள்,தங்களது கடமைகளை, அவை தரும் பலன்களுக்காக மட்டுமே ஆற்றுகிறார்கள்: அவர்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்காக எல்லாவிதமான உபாயங்களையும் கையாளுகிறார்கள்.இந்த வகையான மனிதர்களுக்கு, இறுதியில் கிடைக்கும் பலன் அவர்கள் கையாளும் முறையை நியாயப் படுத்துகிறது.ரஜஸ குணம் கொண்டவர்கள் தற்பெருமையும்,படாடோபமும் கொண்டு,தாங்களே அனைத்தையும் செய்பவர்கள்,பலன் பெறுபவர்கள், அனுபவிப்பவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.அமைதியான ஸத்வ குணம் கொண்டவர்கள், பலன்களைப் பற்றிக் கவலை கொள்ளாது அவற்றை இறைவனது ஸங்கல்பத்திற்கு என விட்டு விட்டு, தங்களது கடமைகைள ஆற்றுகிறார்கள். ஒருபோதும் தங்களது உரிமைகளைப் பற்றி அல்லாது ,எப்போதும் தங்களது கடமைகளைப் பற்றிய உணர்வுடன், அது வெற்றிக்கு அல்லது தோல்விக்கு இட்டுச் செல்லுமா என்ற கவலை அற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் பார்த்தால், கிடைக்கும் பலன்களை விட,பணிகளை ஆற்றுவதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது. ஒவ்வொரு உண்மையான ஆன்மீக சாதகனின் அனுபவமும் இப்படிப் பட்ட மனப்பாங்குடையதாக இருக்க வேண்டும்.