azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Look at Arjuna! When the choice was placed before him to decide which he should receive – the entire army of redoubtableYadhavawar heroes or Lord Krishna alone, unarmed and refusing to fight – without any hesitation, he chose Krishna alone! He knew; he believed; and so, he was saved. What profit will an individual or country make if it accumulates money, gold and grain? The bliss derived from the worship of the Lord which arouses spiritual joy is, any day, far more desirable than the above. Want of faith is a source of true weakness. Love (Prema) is the seed, the overpowering experience of merging with the Divine is the tree (thanmayathwam), and inexhaustible bliss (Anandam) is the fruit. Achieve this consummation with firm faith in the Divine. (Divine Discourse, Oct 12, 1964.)
அர்ஜூனனைப் பாருங்கள்!மகத்தான யாதவ சேனை முழுவதும் வேண்டுமா அல்லது நிராயுதபாணியாக யுத்தம் செய்யாத பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் வேண்டுமா என்று தேர்வு செய்யும் தருணம் வந்த போது, எந்த விதமான தயக்கமும் இல்லாமல், அவன் ஸ்ரீகிருஷ்ணரை மட்டுமே தேர்ந்து எடுத்தான்! அவன் அறிந்திருந்தான்; அவன் நம்பினான்;எனவே, அவன் காக்கப் பட்டான். ஒரு தனி மனிதனோ அல்லது தேசமோ, தனம்,தங்கம் மற்றும் தான்யங்களைக் குவித்து வைப்பதால் என்ன பலனைப் பெற முடியும்? ஆன்மீக சந்தோஷத்தைத் தூண்டும் இறை வழிபாட்டால் கிடைக்கும் ஆனந்தம், எந்நாளும் இதை விட மிகவும் விரும்பத் தக்க ஒன்று. நம்பிக்கையின்மையே உண்மையான பலஹீனத்தின் அடிப்படை.ப்ரேமையே விதை,இறைவனுடன் ஒன்றரக் கலக்கும் ஒப்பற்ற அனுபவமே மரம்; என்றும் குன்றாத ஆனந்தமே பழம். இந்த பூரணத்துவத்தை நிலையான இறை நம்பிக்கையின் மூலம் பெற்றிடுங்கள்.