azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The love of theGopistowards Krishna has led many ignorant people enmeshed in worldly attachments and physical attractions, to turn their faces away from God. Before passing judgement on any subject, you must investigate closely. The love of the Gopis towards Krishna was super-physical, the love of the soul for the Over-soul, of the river for the sea. Their joy when they feel His presence is as supreme as their grief when they feel they are deprived of it. That is why among the songs of the saints, you haveNindhaasthuthialso; that is to say, songs, which blame Him for being cruel, partial, negligent, etc.! Persons deep in this type of love see nothing else, hear nothing else; they behave like mad persons in the world’s view.(Divine Discourse, Oct 11, 1964.)
கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணர் மீது வைத்திருந்த ப்ரேமை,உலக பற்றுதல்கள் மற்றும் உடல் கவர்ச்சிகளில் உழலும் அறியாத மனிதர்களை இறைவனிடமிருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ள வைத்தது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு,நீங்கள் அதை தீர விசாரிக்க வேண்டும். கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணர் மீது வைத்திருந்த ப்ரேமை தேஹாபிமானத்திற்கு அப்பாற்பட்டது;ஆத்மா பரமாத்மாவின் மீது கொள்ளும் ப்ரேமை; நதி கடல் மீது கொண்டுள்ள ப்ரேமையைப் போன்றது. ஸ்ரீகிருஷ்ணர் மீது வைத்திருந்த ப்ரேமை அவரது அருகிமையை அவர்கள் உணர்ந்த போது அவர்கள் பெற்ற ஆனந்தம்,அவரது தரிசனம் கிடைக்காத போது அவர்கள் அடைந்த துயரத்தைப் போலவே மிக உயர்ந்தது. அதனால் தான் ஞானிகளிடையே கூட,நீங்கள் ''நிந்தாஸ்துதி '' செய்பவர்களையும்- அதாவது இறைவனை கொடூரமானவன்,பாரபட்சமானவன் மற்றும் அலட்சியமானவன் என்று குறை கூறுபவர்கள்- பார்க்கிறீர்கள். இவ்வளவு ஆழ்ந்த ப்ரேமை கொண்ட மனிதர்கள் இறைவனைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை;அவனைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை; உலகத்தின் பார்வையில் அவர்கள் பைத்தியக்காரர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.