azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion (Bhakthi) is the continuous flow of love which is unchanging, sincere and pure (Nithya, Sathya, Nirmalam). There is no one who is devoid of devotion; deep within the core, everyone has the feeling of kinship with all creatures. If you have no love, you are like the lamp without the flame. The presence or absence of the feeling makes a lonely man miserable or makes one likeable to many. Love of the pure type is like a bright light. It is not polluted by hate nor is contaminated with greed. Faith in God and faith in doing good is very essential. Also you must have faith in the concept of merit and sin (punyaandpapa). This will help you examine each act and consider its consequences before taking the action. Devotion makes you aware of the Lord, who sustains and supports every being and brings you nearer and dearer to Him.(Divine Discourse, Oct 12, 1964.)
நிலையான,சத்தியமான, நிர்மலமான அன்பின் இடையறாத நீரோட்டமே பக்தி என்பதாகும்.பக்தி அற்ற மனிதர் எவருமில்லை; ஒவ்வொருவரின் ஆழ் மனத்தின் உள்ளும் அனைத்து ஜீவராசிகளுடனான பந்தத்தின் உணர்வு இருக்கிறது. உங்களிடம் அன்பு இல்லை என்றால், நீங்கள் சுடர் இல்லாத தீபம் போன்றவர்களே. உணர்வுகள் இருப்பதும், இல்லாமல் இருப்பதுமே ஒரு தனிமையில் உள்ள மனிதனை பரிதாபத்திற்கு உரியவனாகவோ அல்லது பலராலும் விரும்பப் படுகின்றவனாகவோ ஆக்குகிறது. தூய்மையான அன்பு பிரகாசமான ஒளி போன்றது. அது வெறுப்பால் மாசு படுவதோ அல்லது பேராசையால் அசுத்தம் அடைவதோ இல்லை.இறைவன் மீதும் , நல்லவற்றை செய்வதன் மீதும் நம்பிக்கை மிகவும் அவசியம். மேலும் பாவ,புண்ணியங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இது, ஒவ்வொரு செயலை ஆற்றும் முன்பு, அதை ஆராய்ந்து அதன் விளைவுகளை பரிசீலிக்க உங்களுக்கு உதவும். பக்தி, உங்களை, ஒவ்வொரு ஜீவராசியையும் பேணிக் காக்கும் இறைவனை உணரச் செய்து, உங்களை அவனுக்கு நெருக்கமானவர்கள் ஆகவும், அவனது அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் ஆக்குகிறது.