azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Divinity is above and beyond the intellect and unreachable through the senses. It is its own law; it is independent of all restrictions and modes. Each of the senses can perform only one operation to contribute to gathering knowledge. The ear can inform you of sound; the eyes can speak of colour, the tongue of taste, etc. Know that the Divine is beyond all sensations and systems. Creation, Sustenance and Dissolution (Srishti, SthithiandLaya) are three expressions of the Divine will. You must penetrate the inner meaning of Creation (Srishti) by performing your duty as worship (Karma Yoga), you must grasp the significance of Sustenance (Sthithi) through Devotion to the Lord (Bhakthi Yoga), and when you attain wisdom (throughJnana Yoga), you arrive at the experience ofLaya, Union with Divine.(Divine Discourse, Oct 12, 1964.)
தெய்வீகம் என்பது புத்திக்கு மேலும், அதற்கு அப்பாற்பட்டதும், புலன்களால் அடைய முடியாத ஒன்றும் ஆகும்.அது தனது சொந்த சட்டங்களைக் கொண்டது;எல்லாவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் வகைகளிடமிருந்து தனித்து நிற்பது.அறிவை சேகரிப்பதில் ஒவ்வொரு புலனும் ஒரே ஒரு வேலையைத் தான் செய்ய முடியும்.காது ஒலியை உணர்த்த முடியும்,கண்கள் வண்ணங்களை விளக்க முடியும்,நாக்கு சுவையை உணர்த்த இயலும் போன்றவை. தெய்வீகம் என்பது அனைத்து உணர்வுகளுக்கும், கட்டமைப்புக்களுக்கும் அப்பாற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். படைத்தல்,காத்தல்,ஒன்றரக் கலத்தல் ( ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய ) என்ற மூன்றும் இறைவனது ஸங்கல்பத்தின் வெளிப்பாடுகள். உங்களது கடமைகளை வழிபாடாக ஆற்றுவதன் மூலம் ( கர்மயோகம்), படைப்பின் உள் அர்த்தத்தை நீங்கள் ஊடுருவி உணர வேண்டும்; இறைவன் மீது கொள்ளும் பக்தியின் மூலம் (பக்தியோகம்), காத்தலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஞானம் பெறும் போது ( ஞானயோகம்) இறைவனோடு ஒன்றரக் கலப்பதின் (லய ), அனுபவத்தைப் பெறுவீர்கள்.