azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Vinayakais the Lord who removes all obstacles. The elephant is noted for its acute intelligence. Ganesha's elephant head symbolises sharpness of intellect and the highest power of discrimination. In a forest, when an elephant moves through the jungle, it clears all the obstacles, and leads the way for others to follow. Likewise, worship Ganesha at the start of any activity. His Grace is sufficient to clear all the obstacles in your path and grant success in your undertakings. The small mouse is a clever and lively creature. Symbolically it implies that we should be wise, agile and diligent in our actions.Vinayakais a deity of infinite potency, who encompasses the entire universe within Himself. Accord Him a place of honour and secure His Grace. Then your journey of life will be made smoother and happier.(Divine Discourse, Sep 4, 1989.)
அனைத்துத் தடங்கல்களையும் ( விக்னங்கள் ),நீக்கும் இறைவனே விநாயகர். யானை தனது கூரிய அறிவிற்குப் பெயர் போனது. கணேசரின் யானைத்தலை புத்தி கூர்மையையும், மிகச் சிறந்த பகுத்தறிவு ஆற்றலையும் குறிக்கிறது.ஒரு காட்டில் ,ஒரு யானை போகும் போது,வழியில் உள்ள தடைகளை எல்லாம் களைந்து, மற்றவர்கள் அதைத் தொடர்ந்து வருமாறு முன் இட்டுச் செல்கிறது. அதைப் போலவே,எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும், கணேசரை வழிபடுங்கள்.உங்களது வழியில் வரும் அனைத்துத் தடைகளையும் நீக்கி,உங்களது முயற்சிகளை வெற்றி பெறச் செய்ய அவரது அருள் ஒன்றே போதும்.சுண்டெலி ஒரு புத்திசாலியான மற்றும் சுறுசுறுப்பான ஜீவராசி.நாம் நமது செயல்களில் அறிவு,சுறுசுறுப்பு மற்றும் புத்திசாலித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அளவற்ற ஆற்றல் கொண்டு இந்த பிரபஞ்சத்தையே தன்னுள் கொண்ட தெய்வம் விநாயகர்.அவரைப் போற்றி அவரது அருளைப் பெறுங்கள். பின்னர் உங்களது வாழ்க்கைப் பயணம், சீரானதாகவும், சந்தோஷமானதாகவும் ஆகிவிடும்.