azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You ask for Grace, which is rare and is available at a high cost. However, you pay only trash and are disappointed that you are unable to secure it! Isn’t it sheer avarice! You claim that you have been visiting Puttaparthi (or other sacred places) and have served there, longer than 18 years or so and expect huge chunks of Grace. But it is not the years that matter – what matters is the depth to which the roots ofKarma(past actions) have grown from your previous births. It takes a long time and systematic effort to clear the field of all those growths - that effort is thesadhana, of good actions and worship (KarmaandUpasana).(Divine Discourse, Oct 11, 1964.)
நீங்கள் அரியதும்,அதிக விலை கொண்டதுமான இறை அருளை வேண்டுகிறீர்கள். ஆனால்,நீங்கள் குப்பையை மட்டுமே கொடுத்து விட்டு, அது கிடைக்கவில்லையே என அதிருப்தி அடைகிறீர்கள் !இது வெறும் பேராசை அல்லவா ! நீங்கள் புட்டபர்த்திக்கும் மற்றம் பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் சென்று 18 வருடங்களுக்கும் மேலாக சேவை புரிந்திருக்கிறீர்கள் எனப் பறை சாற்றிக் கொள்கிறீர்கள்; எனவே மிகப் பெரிய அளவில் இறை அருள் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.ஆனால், எவ்வளவு வருடங்கள் என்பது ஒரு பொருட்டல்ல-உங்களது முந்தைய பிறவிகளின் கர்மா எவ்வளவு ஆழமாக வேறூன்றி இருக்கிறது என்பதே பிரதானம். அதிக காலமும்,முறையான முயற்சியும் , நிலத்திலிருந்து அந்த அனைத்து புதர்களையும் நீக்குவதற்குத் தேவைப் படுகிறது - அந்த முயற்சியே நற்கருமங்களும், வழிபாடுகளும் நிறைந்த ஆன்மீக சாதனை.