azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

There are two very important statements in the Bhagavad Gita, which you must take to heart and profit from:Shraddhavan Labhate Jnanam(The one steady in faith gains wisdom and liberation) andSamshayaathma Vinashyathi(Doubt leads to perdition, spiritual ruin). Dwell on these axioms and practice the spiritual disciplines of repetition of the Lord’s name and meditation on His form.Gopisof Brindavan yearned for the Lord with purity in their hearts and attained union with Him. You too must fill your mind with His beautiful form and contemplate on the glory of the Lord. Then you can attain Divinity. This is the pursuit that is worthy, not the pursuit of fame, nor the friendship of the famous. (Divine Discourse, Oct 11, 1964.)
ஸ்ரீமத் பகவத்கீதையில் உள்ள இரண்டு முக்கியமான வாக்கியங்கள் உள்ளன; நீங்கள் அவற்றை இதயத்தில் ஏற்று பயன் பெற வேண்டும்; ஒன்று '' ஸ்ரத்தாவான் லபதே ஞானம் '' ( நம்பிக்கையில் நிலையாக உள்ளவன் ஞானத்தைப் பெறுகிறான் ); மற்றொன்று '' ஸம்ஸயாத்மா வினஸ்யதி '' ( சந்தேகம் கொண்டவன் ஆன்மீகத்தில் அழிவை அடைகிறான்). இந்த இரண்டு கோட்பாடுகளையும் பற்றிச் சிந்தித்து, இறைநாமஸ்மரணை மற்றும் அவனது ரூபத்தைத் தியானிப்பது என்ற ஆன்மீக சாதனையை மேற்கொள்ளுங்கள். ப்ருந்தாவனத்தின் கோபிகைகள் தங்களது இதயங்களில் தூய்மையோடு இறைவனுக்காக ஏங்கித் தவித்து, அவனுடன் ஒன்றரக் கலந்தார்கள்.நீங்களும் கூட இறைவனது சௌந்தர்யமான ரூபத்தால் உங்கள் மனதை நிரப்பி, அவனது மகத்துவத்தைத் தியானிக்க வேண்டும்.பின்னர் நீங்கள் தெய்வீகத்தைப் பெற முடியும்.இத்தகைய நாட்டமே மதிப்பிற்கு உரியதே அன்றி ,புகழ் அல்லது புகழ் அடைந்தோரது நட்பு ஆகியவற்றில் நாட்டம் கொள்வது அல்ல.