azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Teaching is the process in which the teacher and the taught cooperate, a pleasant and useful experience for both. When teachers enter the classroom, children salute them; that is a lesson in humility, in respecting age and scholarship, and in gratitude for the service rendered. The teachers too, should decide to deserve the salutation through their sincere efforts and selfless service. Move the students through your love. Do not win the respect of the student through fear. Education is a slow process, like the unfolding of a flower, the fragrance becoming deeper and more perceptible as the flower silently blossoms, one petal at a time. The unfolding will be helped if the teacher is a fine example of discrimination, humility and clear-sightedness, rather than a person engaged in the task of mere repetitive teaching and coaching for examinations. Example, not precept, is the best teaching aid. (Divine Discourse, Sep 9, 1958).
கல்வி கற்பிப்பது என்பது, ஆசிரியரும் மாணவரும் ஒத்துழைத்து, அதை இருவருக்கும் ஒரு இனிமையான,பயனுள்ள அனுபவமாகச் இருக்கச் செய்யும் முறையாகும். ஆசிரியர்கள் வகுப்பில் நுழையும் போது மாணவர்கள் அவர்களை வணங்குகிறார்கள்; இது அவர்களின் வயது மற்றும் பாண்டித்யத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் ஆற்றும் சேவைக்கு நன்றி கூறும், பணிவின் ஒரு பாடமாகும்.தங்களது மனமார்ந்த முயற்சி மற்றும் தன்னலமற்ற சேவையின் மூலம் ஆசிரியர்களும் அந்த வணக்கத்திற்கு உகந்தவர்களாக இருக்க உறுதி கொள்ள வேண்டும். உங்களது அன்பால் மாணவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுங்கள்.மாணவனின் மரியாதையை அச்சுறுத்தலின் மூலம் பெறாதீர்கள்.கல்வி என்பது,ஒவ்வொரு இதழாக மலர்ந்து , அது மலர மலர அதன் மணம் ஆழ்ந்ததாகவும் ,தெளிவாகவும் ஆகி, அமைதியாக மலர்கின்ற பூவின் மலர்ச்சி போன்ற ஒரு மெதுவான முறையாகும். ஒரு ஆசிரியர் நெட்டுருப் போடச் செய்வது மற்றும் பரீட்சைகளுக்காக பயிற்சி அளிக்கும் ஒருவராக மட்டும் இல்லாது,பகுத்தறிவு, பணிவு மற்றும் தெளிவின் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பாரானால்,அது இந்த மலர்ச்சிக்கு மிகவும் துணை செய்யும்.புரிய வைப்பதை விட, நடந்து காட்டுவதே,கற்பிப்பதற்கான மிகச் சிறந்த கருவியாகும்.