azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Thirst for Krishna, to see Him, to hear Him, to listen to His Flute, for installing Him in the heart and mind, and for grasping His reality through the intellect - this thirst is most conducive to peace and joy. Devotion to Krishna is the chain by which the monkey mind can be fastened and subdued. The word Krish means to attract (as in aakarshana). Lord Krishna attracts your mind towards Him and turns them away from sensory desires that torment you. He satisfies the deepest thirst of all beings, for peace, joy and wisdom. Hence thirst for Krishna is a sign of health in the spiritual field. Repetition of the name Krishna is useless, unless the contemplation of the Glory of Krishna starts purifying your character. The Grace of the Lord is very powerful and is endowed on the deserving alone. Hence begin today to sublimate your character saturated with piety and devotion. Then you will secure the Grace of the Lord. (Sathya Sai Speaks, Vol 6, Ch 24)
ஸ்ரீகிருஷ்ணருக்கான ஏக்கம், அவரைக் காண,அவரைக் கேட்க,அவரது புல்லாங்குழல் இசையைக் கேட்க,அவரை இதயம் மற்றும் மனதில் பதிக்க, அவரது உண்மை நிலையை புத்தியால் அறிந்து கொள்ள- இந்த தாகமே சாந்தி, சந்தோஷங்களை அடைவதற்கு மிகவும் உகந்தது.ஸ்ரீகிருஷ்ணர் மீது கொள்ளும் பக்தியே நமது குரங்கு மனதைக் கட்டிப் போட்டு அடக்க வல்ல சங்கிலி போன்றது.'' க்ருஷ்ணா'' என்ற வார்த்தைக்கு '' ஆகர்ஷிப்பவர் '', அதாவது ஈர்ப்பவர் என்று பொருள்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உங்கள் மனதை அவர் பால் ஈர்த்து,உங்களை ஆட்டி வைக்கும் புலனின்ப ஆசைகளிலிருந்து, திருப்பி விடுகிறார்.அவர்,அனைத்து ஜீவராசிகளின் சாந்தி, சந்தோஷங்கள் மற்றும் ஞானத்திற்கான மிக ஆழ்ந்த தாகத்தைத் தீர்த்து வைக்கிறார்.எனவே, ஸ்ரீகிருஷ்ணருக்கான தாகம் ஆன்மீகத் துறையில் ஆரோக்கியத்தின் ஒரு அறிகுறியாகும். ஸ்ரீகிருஷ்ணரின் மகத்துவத்தைத் தியானிப்பது உங்களது குணநலன்களைத் தூய்மைப் படுத்த ஆரம்பிக்கவில்லை என்றால், ஸ்ரீகிருஷ்ண நாமஸ்மரணையால் பயனில்லை. இறைவனது அருள் மிகவும் சக்தி வாய்ந்தது;அது தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப் படுகிறது.எனவே, இன்றிலிருந்தே உங்களது குண நலன்களை பக்தியால் நிரப்பி சீர்படுத்துங்கள்.பின்,நீங்கள் இறைவனது அருளைப் பெறுவீர்கள்.