azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The demon Bhasmasura, through God’s Grace earned the power to turn into ash anyone by placing his hand on their head. However his instincts were not tamed, his reasoning was not purified. Blinded by greed and egoism, he tried to reduce the very Giver of the gift. Hence, unless you are extra careful to examine the very process of reasoning, even while the process is on, there is a big danger that you may be following only the trail that you yourself have laid down. Reason can be tamed only by discipline; through compassion, calmness, forbearance and endurance (Daya, Shantham, Kshama, and Sahana). Train your mind to walk quietly along small stretches of road at first and then after you have become sure of its docility, you can take it along safely down the tortuous road of the sixfold temptations of lust, anger, greed, delusion, pride and jealousy.(Divine Discourse, Apr 12, 1959.)
பஸ்மாஸூரன் என்ற அரக்கன்,இறைவனது அருளால், தன் கையை எவரது தலையில் வைத்தாலும்,அவர்களைச் சாம்பலாக்கி விடும் வரத்தைப் பெற்றிருந்தான்.என்றாலும் கூட,அவனது உணர்வுகள் கட்டுக்குள் இல்லை, அவனது பகுத்தறிவும் தூய்மைப் படவில்லை. பேராசை மற்றும் அஹங்காரத்தால் கண் மூடித்தனமாக, அந்த வரம் அளித்த இறைவனையே சாம்பலாக்க முயன்றான். எனவே,நீங்கள் பகுத்தறியும் முறையை, அவ்வாறு செய்யும் போதே,மிகவும் கவனமாக ஆராயாவிடில்,நீங்கள் இட்ட பாதையை, நீங்களே பின்பற்றி விடும் மிகப் பெரிய ஆபத்திற்கு உள்ளாகி விடுவீர்கள். பகுத்தறிவை கட்டுப்பாடு, தயை, சாந்தம், சகிப்புத் தன்மை மற்றும் பொறுமையின் மூலம் தான் அடக்க முடியும். உங்களது மனதை, முதலில் சிறிய தூரத்தை உங்களது பாதையில் மெதுவாக நடக்கச் செய்து,அதன் பண்பினை உறுதி செய்து கொண்டு விட்டீர்களானால், அதன் பின்னர், நீங்கள் அதனை காம, க்ரோத, லோப,மோஹ, மத ,மாத்சர்யங்கள் என்ற ஆறுவிதமான கவர்ச்சிகளின் கரடுமுரடான பாதையில் பாதுகாப்பாக இட்டுச் செல்ல முடியும்.