azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You are happiest when you are immersed in yourself! The child in the womb is in the state Soham (‘I am He’ - union with God) but when it is born in the world, it starts the question Koham (‘Who am I’). For it forgot its truth and identifies itself with the body and the senses. Until it becomes a realized person (Jnani), it will never regain the knowledge of Soham. Madhava-tatvam (Divine state) when it assumes a form, is Manava (Man). Manava can become Madhava (Divine) by engaging in actions dedicated to God. You can then discover your Divine State. What is the use of doing only human action (Manava Karma) or even demoniac action and claiming that human being is Divine? Virtue must be your life-breath. Character must be your backbone. Without these no meritorious act will fructify. Retain your evil qualities and win troubles; Renounce them and win peace! (Divine Discourse, Oct 10, 1964.)
உங்களுள் நீங்கள் ஆழ்ந்திருக்கும் போது,நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு,'' ஸோஹம் - நான் அவனே'' என இறைவனுடன் ஒன்றி இருக்கிறது; ஆனால்,அது இந்த உலகில் ஜனித்தவுடன், '' கோஹம்-நான் யார்?'' என்ற கேள்வியை ஆரம்பிக்கிறது. ஏனெனில்,அது உண்மையை மறந்து,தன்னை உடல் மற்றும் புலன்களாக கண்டு கொள்கிறது.அது ஒரு ஞானியாகும் வரை,ஒருபோதும், ''ஸோஹம்'' என்பதன் அறிவை திரும்பப் பெறப் போவதில்லை. '' மாதவ- தத்துவம்'' - தெய்வீகம் ஒரு ரூபத்தை ஏற்கும் போது அது '' மானவன் ''-மனிதன் ஆகிறது. '' மானவன் '',இறைவனுக்கு அற்பணிக்கப் படும் செயல்களில் ஈடுபட்டால், '' மாதவன் '' ஆக முடியும்.;நீங்கள் பின்னர் உங்களது தெய்வீக நிலையை கண்டு கொள்ள முடியும். மனிதச் செயல்கள் ( மானவ கர்மா ) அல்லது ஏன் அசுரச் செயல்களை மட்டுமே செய்து விட்டு,மனிதனே ,தெய்வம் என பறைசாற்றிக் கொள்வதில் என்ன பயன்? நல்லொழுக்கமே,உங்கள் உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.நற்குணங்களே, உங்களது முதுகெலும்பாக இருக்க வேண்டும். இவை இன்றி புண்யச் செயல்கள் பலன் தரா. தீய குணங்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்;துன்பங்களைப் பெறுவீர்கள்; அவற்றை விட்டு விடுங்கள், சாந்தியைப் பெறுங்கள்.