azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is a pilgrimage to God and the path lies before you. But, unless you take the first step forward and follow it with succeeding steps, how can you reach it? Start with courage, faith, joy and steadiness, you will certainly succeed. The mind and the intellect are like two bullocks tied to a cart. The bullocks are not used to the road of Truth, Righteousness, Peace and Love, and so they drag the cart along the road familiar to them, namely, falsehood, injustice, worry and hatred. You have to train the bullocks to tread the right path, so that they may not bring disaster to themselves and to others. Every object or being in the world will give both pleasure and pain. Control and train your mind to see this real nature of the objective world. That is the real fruit of education.(Divine Discourse, Dec 20, 1958.)
வாழ்க்கை இறைவனைக் குறித்த ஒரு தீர்த்த யாத்திரை;அந்தப் பாதை உங்கள் முன் இருக்கிறது.ஆனால்,நீங்கள் முன்னோக்கி முதல் அடி எடுத்து வைத்து, அதைத் தொடர்ந்து அடுத்த அடிகளை எடுத்து வைக்கவில்லை என்றால்,அவனை எவ்வாறு சென்று அடைய முடியும்?தைரியம்,நம்பிக்கை, சந்தோஷம் மற்றும் நிதானத்துடன் ஆரம்பியுங்கள்,நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். மனமும்,புத்தியும், ஒரு வண்டியில் பூட்டப் பட்ட இரண்டு மாடுகளைப் போன்றவை.இந்த மாடுகளுக்கு சத்யம், தர்மம்,சாந்தி மற்றும் ப்ரேமையின் பாதைகள் பழக்கமானவை அல்ல; எனவே அவை வண்டியை அவைகளுக்குப் பழக்கப் பட்ட பாதையில்-அதாவது பொய்மை,அநீதி,கவலை மற்றும் த்வேஷத்தின் பாதையில் இழுத்துச் சென்று விடுகின்றன.நீங்கள் இந்த மாடுகளை, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அழிவைக் கொண்டு வராமல் இருக்க, சரியான பாதையில் செல்லப் பழக்கப் படுத்த வேண்டும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும் அல்லது பொருளும் சுகம், துக்கம் என்ற இரண்டையும் தருபவை.இந்த உலகின் உண்மையான இந்த தன்மையைக் கண்டு கொள்வதற்கு உங்கள் மனதைக் கட்டுப் படுத்தி,பயிற்சி அளியுங்கள். அதுவே கல்வியின்உண்மையான பலனாகும்.