azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

When some of you visit a temple or a holy shrine, even as you participate in the worship, your thoughts are about the safety of your footwear that you left outside. You will not get joy or liberation by merely going to a holy place. You will not get the joy even through darshan, sparshan and sambhashan- seeing Him, touching Him and conversing with Him. You must follow the prescription and act in accordance with the Divine Directions. Earnestly and enthusiastically, take the path shown by the great devotees of the Lord. You must feel inseparable affinity with the Lord, just as the wave is inseparable from the sea. Butter is imminent in milk and is invisible. So too, Divinity is present in every being and will manifest from within.(Divine Discourse, Oct 10, 1964.)
உங்களில் சிலர் ஒரு கோவிலுக்கோ அல்லது ஒரு புனிதத் தலத்திற்கோ செல்லும் போது,அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போதே,உங்கள் எண்ணங்கள் எல்லாம் நீங்கள் வெளியே விட்டு வந்திருக்கும் உங்கள் செருப்புக்களின் பாதுகாப்பைப் பற்றியே இருக்கின்றன.வெறும் ஒரு புனிதத் தலத்திற்குப் போவதால் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியோ அல்லது மோக்ஷமோ கிட்டி விடாது.இறைவனைக் காண்பதாலோ,அவனைத் தொடுவதாலோ,அவனுடன் பேசுவதாலோ கூட உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது.உங்களுக்கு அறிவுறுத்தப் பட்ட முறைகளைக் கடைப்பிடித்து, தெய்வீக ஆணைகளின் படி நீங்கள் நடக்க வேண்டும்.உளமாற, உற்சாகத்துடன் இறைவனது சிறந்த பக்தர்கள் காட்டிய பாதையில் செல்லுங்கள்.அலைகளை எவ்வாறு கடலை விட்டு பிரிக்க முடியாதோ, அப்படிப் பட்ட இணை பிரியாத உறவை இறைவனுடன் நீங்கள் உணர வேண்டும்.வெண்ணெய் பாலிலேயே கண்களுக்குப் புலப்படாமல் இருக்கிறது. அதைப் போலவே,தெய்வீகமும் ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் உறைகிறது; உள்ளிருந்து அது வெளிப்படவும் செய்யும்.