azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Krishna declared in the Bhagavad Gita, “Mamaivamsho jivaloke jivabhuta sanathana(Every being is an aspect of My Divinity).” When God considers you as part of Himself, you should also consider others as your own self. Love All, Serve All. See no difference between individuals; do not think of one as a pauper and the other a millionaire. Many millionaires today are engaged in filling their own belly. They are not prepared to give even a morsel of food as alms to a beggar who stands at their doorstep. What is the use of having such rich men in our country? They are rich only for name’s sake but in reality they are the poorest of the poor. Pursue the path of charity and righteousness. Consider others as your own brothers and sisters. Rather, consider them as thyself.(Divine Discourse, Aug 15, 2007.)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில்,'' மைமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத ஸனாதனா'' அதாவது, ஒவ்வொரு ஜீவராசியும் எனது தெய்வீகத்தின் ஒரு அம்சமே என பறை சாற்றுகிறார். எப்போது இறைவனே உங்களை அவனின் ஒரு அங்கம் எனக் கருதுகிறாரோ, நீங்களும் மற்றவர்களையும் உங்களுடையவர்களாகவே கருத வேண்டும். அனைவரையும் நேசியுங்கள்,அனைவருக்கும் சேவை செய்யுங்கள். தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே வித்தியாசம் பாராட்டாதீர்கள்; ஒருவரை பரம ஏழையாகவும் மற்றொருவரை கோடீஸ்வரராகவும் எண்ணாதீர்கள். பல கோடீஸ்வரர்கள் இன்று தங்களது வயிற்றை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்களது வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரருக்கு ஒரு பிடி அன்னத்தைக் கூட, தானமாகத் தர அவர்கள் தயாராக இல்லை.இப்படிப் பட்ட செல்வந்தர்களைப் பெற்றிருப்பதால் நமது நாட்டிற்கு என்ன பயன்?அவர்கள் பெயர் அளவில் தான் செல்வந்தர்களே அன்றி, உண்மையில் அவர்கள் பரம ஏழைகளே. தானம் மற்றும் தர்மத்தின் பாதையைக் கடைப் பிடியுங்கள். மற்றவர்களையும் உங்களது சகோதர சகோதரிகளாகக் கருதுங்கள். அது கூட அல்ல, அவர்களை நீங்களாகவே கருதுங்கள்.