azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

People grieve because they develop attachment towards the unreal. They cultivate an unreasonable affection for wealth. However they are ready to sacrifice their hard earned riches to save the lives of their children, for their attachment to children is stronger than their attachment to wealth. Some people however, stoop so low as to neglect even their children, when the choice is between their preferences and their children’s well-being. Real joy can be found only by dwelling on Divinity within you! The orange has a rind, which is not very tasty, but it protects the fruit and preserves it from decay. To get the sweetness of the orange, you must peel and throw off the rind. Such is the fruit of the tree of life. It is protected by a bitter rind! A wise person does not try to eat the rind – after due consideration, he removes it and discards it, and then enjoys the sweetness of the fruit.(Divine Discourse, Dec 14, 1958.)
பொய்மையானவற்றில் பற்றுதலை வளர்த்துக் கொள்வதால் மனிதர்கள் துயரமடைகிறார்கள்.அவர்கள் செல்வத்தின் மீது நியாமற்ற பிரியத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.ஆனால்,அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை தங்களது குழந்தைகளின் உயிரைக் காப்பதற்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் குழந்தைகளின் மீது கொண்டுள்ள பற்றுதல் அவர்களுக்கு செல்வத்தின் மீது உள்ள பற்றுதலை விட வலிமையானது, ஆனால், சிலர் தங்களது விருப்பங்களுக்காக, தங்களது குழந்தைகளின் நலனைக்கூட, உதாசீனப் படுத்தும் அளவிற்கு இறங்கி விடுகிறார்கள். உண்மையான ஆனந்தம், உங்களுள் உள்ள தெய்வீகத்தை தியானிப்பதால் தான் கிடைக்கும் ! ஆரஞ்சுப் பழம் கசப்பான தோலைக் கொண்டது, ஆனால் அது அந்தப் பழத்தைப் பாதுகாத்து, அதை, அழுகி விடாமல் காக்கிறது. ஆரஞ்சுப் பழத்தின் இனிமை கிடைக்க , நீங்கள் அதன் தோலை உரித்து வெளியே எறிந்து விட வேண்டும்.வாழ்க்கை எனும் மரத்தின் பழமும் இப்படிப் பட்டது தான். அதுவும் ஒரு கசப்பான தோலால் காப்பாற்றப் படுகிறது ! ஒரு அறிவுள்ள மனிதன் அந்தத் தோலைச் சாப்பிட முயலுவதில்லை- தேவையான ஆய்விற்குப் பிறகு,அவன் அதை உரித்து, எடுத்து விட்டு, பின்னர் அந்தப் பழத்தின் இனிமையை அனுபவிக்கிறான்.