azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no point in distributing the essence of spirituality (Adhyatma rasa) to underfed and weak people; give them food (Anna rasa) first, make them strong enough to entertain strong beliefs and contain strong ideals. Physical hunger must first be appeased by simple and pure (Sathwik) food. Then the repetition of the Name of the Lord must be undertaken; it can be any name that appeals to you the most. Do not treat the Name lightly. Respect it even if you hear it from the lips of a beggar, who uses it to procure alms. Though the person who utters the Name is bad or though his motive in uttering it may not be noble, do not ill treat the Name for its purity can never be harmed. Thank them for reminding you of the Lord and go your way.(Divine Discourse, Dec 14, 1958.)
பசியால் வாடி,வதங்குவோருக்கு,அத்வைத சாரத்தைப் வினியோகிப்பதால் எந்தப் பயனும் இல்லை;முதலில் அன்னத்தின் சாரத்தை( உணவை ) அவர்களுக்கு அளித்து, அவர்களை உறுதியான நம்பிக்கைகள் மற்றும் ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்வதற்குத் தக்க வலுவள்ளவர்களாக ஆக்குங்கள். வயிற்றுப் பசியை எளிமையான மற்றும் ஸாத்வீகமான உணவால் போக்க வேண்டும். பின்னர் இறை நாமஸ்மரணையைச் செய்வதை எடுத்துக் கொள்ள வேண்டும்; அது உங்களுக்கு மிகவும் பிடித்த எந்த நாமமாகவும் இருக்கலாம். அந்த நாமத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளதீர்கள். தானத்தைப் பெறுவதற்காக ஒரு பிச்சைக் காரர் அதை உச்சரித்தாலும் கூட அதற்கு மதிப்பளியுங்கள்.அந்த நாமத்தை உச்சரிப்பவர் தீயவராக இருந்தாலும்,அதை உச்சரிப்பதற்கான அவரது நோக்கம் சீரியதாக இல்லாவிட்டாலும், அந்த நாமத்தை அவமதிக்காதீர்கள், ஏனெனில், அதன் தூய்மை ஒருபோதும் கெடுவதில்லை. இறைவனை உங்களுக்கு நினைவூட்டியற்காக அவர்களுக்கு நன்றி கூறி விட்டு, உங்கள் வழியில் செல்லுங்கள்.