azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Walk the path shown to you by the Ramayana, Mahabharatha, Bhagavatha and other scriptures. Proceed along that path, unmindful of halts and handicaps, approvals or disapproval of kith and kin, of praise or blame from society. What exactly is praise or blame? They are words - just sound waves coming from across the air; waves that strike your ear. Let them strike only the outer ear, do not welcome them in. Grace is won by suffering alone. The Lord incarnates in the world when unrighteousness becomes rampant. Therefore adharma (unrighteousness) has to be suffered so that each one may have the joy of welcoming the Lord and experiencing His Presence.(Divine Discourse, Oct 9, 1964.)
ஸ்ரீமத் ராமாயணம்,மஹாபாரதம்,ஸ்ரீமத்பாகவதம் மற்றும் இதர மறை நூல்கள் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள்.தடங்கல்கள், தடைகள், உற்றார், உறவினரது ஏற்றுக் கொள்ளாத நிலை,சமூகத்தின் புகழ்ச்சி,இகழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் கவலைப் படாது,அந்த வழியில் முன்னேறுங்கள். புகழ்ச்சி, இகழ்ச்சி என்றால் என்ன ? அவைகள், காற்றில் ஊடுருவி வந்து, உங்கள் காதுகளில் ஒலிக்கும்,வெறும் வார்த்தைகளே. அவை உங்களது வெளிச் செவிகளில் மட்டுமே ஒலிக்கட்டும்,அவற்றை உள்ளே வரவேற்காதீர்கள். இறை அருள் துன்பத்தை அனுபவிப்பதால் மட்டுமே கிட்டும் . அதர்மம் தலை விரித்தாடும் போது தான் இறைவன் உலகில் அவதாரம் எடுக்கிறான். எனவே, அதர்மத்தை சகித்துக் கொண்டு தான் ஆக வேண்டும்; அப்போது தான், இறைவனை வரவேற்று அவனது அருகாமையை அனுபவிக்கும் ஆனந்தத்தை பெற இயலும்.