azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The first step in samskara (refinement) is to remove dirt from the mind. Know that envy is the stickiest dirt. You must be happy, when people around you are happy. That is the true test. The Ramayana says that Lord Rama was happy when joyous events happened to others around, as if they happened to Him. Krishna describes Arjuna as An-asuya(envy-less). What a great compliment to receive from the Master Himself! That is why Lord Krishna taught the mysteries of spiritual discipline to Arjuna. Have deep Love for the Lord. But be very careful not to become depressed with envy when others also love Him or get His attention and become attached to Him. Always be vigilant to have love without envy. (Divine Discourse, Oct 9, 1964)
மனதிலிருந்து அழுக்கை நீக்குவதே ஸம்ஸ்காரத்தின் முதல் படி. பொறாமையே அதிகமாக ஒட்டிக் கொள்ளும் அழுக்கு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ள சக மனிதர்கள் சந்தோஷமாக இருந்தால், நீங்களும் சந்தோஷப் பட வேண்டும். அதுவே உண்மையான பரீக்ஷை. ஸ்ரீராமர் , தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது, தனக்கே அவை நிகழ்ந்தது போல சந்தோஷப் பட்டார் என ஸ்ரீமத் ராமாயணம் கூறுகிறது. ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனை '' அன் அஸூயா '', அதாவது பொறாமை அற்றவன் என வர்ணிக்கிறார். பகவானிடமிருந்தே கிடைக்கும் எவ்வளவு தலைசிறந்த பாராட்டு இது! அதனால் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனுக்கே ஆன்மீக சாதனைகளின் ரகசியங்களை கற்பித்தார்.இறைவன் மீது ஆழ்ந்த ப்ரேமை வையுங்கள். ஆனால், மற்றவர்களும் அவனை நேசித்து அல்லது அவனது கவனத்தை ஈர்த்து, அவனிடம் பற்று வைக்கும் போது, பொறாமை கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். பொறாமை இன்றி ,அன்பு செலுத்துவதில் எப்போதும் கவனமாக இருங்கள்.