azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 31 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 31 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The women of a country should be happy, healthy and holy. Every woman has a very crucial role to play in their individual uplift and the uplift of their homes and societies around them. Young girls and women alike should learn the technique of mental calm, social harmony and contentment with their livelihood. They should also know that joy can be attained only through service to those in need and in distress without any expectation of the benefits that may follow from the kindness shared. They should learn to lay aside the egoism that poisons the service activities. Even those serving for years tend to extol and promote themselves as the founders of institutions and guardians of the poor and needy. The benefit and joy from any act of service is the act itself. The fruit of service is the removal of egoism, not its multiplication.(Divine Discourse, Sep 9, 1958.)
ஒரு நாட்டின் மகளிர் சந்தோஷமாகவும்,ஆரோக்யமாகவும்,புனிதமாகவும் இருக்க வேண்டும்.ஒவ்வொரு மகளிருக்கும் தங்களது தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் அவர்களது குடும்பம் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள சமூகம் ஆகியவற்றின் முன்னேற்றத்தில் முக்கியமான பங்கு உள்ளது.இளம் பெண்களும், மகளிரும் ஒன்று போல,மன அமைதி,சமூகத்தில் இசைவு மற்றும் தங்களது வாழ்க்கையில் திருப்தி ஆகியவற்றிற்கான உத்திகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.தேவைப் படுவோருக்கும் துன்பப்படுவோருக்கும், தாங்கள் பகிர்ந்து கொள்ளும் கனிவினால் விளையக் கூடிய பலன்களை எதிர்பாராது, சேவை ஆற்றுவதன் மூலமே, ஆனந்தம் பெற முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.சேவைப் பணிகளை விஷமயமாக்கக் கூடிய அஹங்காரத்தை ஒதுக்கி வைக்க அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பல வருடங்களாக சேவை ஆற்றிக் கொண்டு இருப்பவர்கள் கூட, தங்களை பல நிறுவனங்களின் ஸ்தாபனர்கள் மற்றும் ஏழை எளியவர்களின் காப்பாளர்கள் எனப் புகழ்ந்து, போற்றிக் கொள்ள முனைந்து விடுகிறார்கள்.எந்தச் சேவையின் ஆனந்தமும், பலனும்,அந்த சேவைப் பணிதான்.சேவையின் பலன் அஹங்காரத்தை விலக்குவதே அன்றி ,அதைப் பெருக்கிக் கொள்வதல்ல.