azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Even the best of doctors cannot save a person, when death calls. Everyone has to necessarily respond to the call, whether they are a bride or bridegroom on a ceremonial seat or on a pilgrimage to a holy place. Death brooks no delay, death accepts no excuse. Tears do not move its heart, nor can threats keep it away. So plant the seed of any one of His thousand names that appeals to you, in the well-prepared soil of your heart. Let it sprout in the silence there. Water it with love and service to fellow beings; guard it against pests and cattle, which are the outward dragging emotions and passions. You can do this by erecting the fence of repetition of the divine name and meditation (japa and dhyana). Then, you can reap the harvest of bliss (Anandam).(Divine Discourse, Oct 8, 1964).
இறப்பு வரும் போது,தலைசிறந்த மருத்துவர் கூட ஒருவரைக் காப்பாற்ற முடியாது. ஒவ்வொருவரும் அதன் அறைகூவலுக்கு பணிந்து தான் ஆக வேண்டும் ; மணப் பெண் அல்லது மணமகனாக, மண மேடையில் அமர்ந்திருந்தாலும் சரி, புனிதத் தலத்திற்குத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இருந்தாலும் சரி. இறப்பு தாமதிப்பதும் இல்லை,எந்த சமாதானத்தையும் ஏற்பதும் இல்லை. கண்ணீர் அதன் இதயத்தை இளகச் செய்யவும் முடியாது, அச்சுறுத்தல்கள் அதனை விலக்கி வைக்கவும் முடியாது. எனவே, இறைவனின் ஆயிரக்கணக்கான திரு நாமங்களில் ஏதாவது ஒன்றை, நன்கு பண்படுத்தப் பட்ட உங்கள் இதயம் என்ற நிலத்தில் விதைத்திடுங்கள். அதன் அமைதியில் அது முளை விடட்டும்.அன்பு மற்றும் சக மனிதர்களுக்கு சேவை என்ற நீரைப் பாய்ச்சுங்கள்;வெளி உலகிற்கான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் எனும் பூச்சிகள் மற்றும் கால் நடைகளிலிருந்து அதைக் காப்பாற்றுங்கள்.இறை நாமஸ்மரணை மற்றும் ஜப, தியானங்கள் என்ற வேலியை எழுப்புவதன் மூலம் இதைச் செய்யலாம். பின்னர், நீங்கள் ஆனந்தத்தை அறுவடை செய்ய முடியும்.