azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Illusion (maya) envelops the good with the blemish of the bad. It makes evil glitter with the shine of the good. Discriminate to the best of your capacity and develop your capacity to discriminate. Struggle to win, that is the best that you can do. Your conscience knows well the source of joy and happiness. It will prod you towards the right path. You must take it as your guide and not disobey it, every time it contradicts your whim or fancy. There is no need for you to retire into a forest or a cave to know your inner Truth and to conquer your lower nature. As a matter of fact, you have no choice to exercise your vices there, so the victory achieved there may not be genuine or lasting. Be in the world, yet away from its tentacles. This is the victory for which you deserve congratulations.(Divine Discourse, Sep 3, 1958.)
மாயை, தீயவற்றின் கறைகளால், நல்லவற்றை சூழ்ந்து கொண்டு விடுகிறது. அது தீயவை, நல்லவற்றின் ஒளியுடன் பிரகாசிக்குமாறும் செய்து விடுகிறது. உங்களால் முடிந்த அளவு பகுத்து ஆராயுங்கள்; உங்களது பகுத்தறியும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.வெற்றி பெறப் போராடுங்கள்; உங்களால் செய்ய முடிவதில் சிறந்தது அதுவே. ஆனந்தம் மற்றும் சந்தோஷத்தின் உறைவிடம் எது என்பதை உங்கள் மனச்சாட்சி நன்கு அறியும். அது உங்களை சரியான பாதையில் செல்ல முடுக்கி விடும்.நீங்கள் அதனை உங்களது வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்; உங்களது பிரமை மற்றும் கற்பனைகளுக்கு எதிராக அது இருக்கும் போது, அதற்குப் பணிந்து நடக்காமல் இருக்கக் கூடாது. உங்களது உண்மை இயல்பைத் தெரிந்து கொள்வதற்காக அல்லது உங்களது கீழ்த்தரமான இயல்பை வெல்வதற்காக நீங்கள் காட்டிற்கோ அல்லது குகைக்கோ செல்லத் தேவையில்லை. உண்மையில், உங்களது தீய குணங்களைக் காட்ட அங்கு உங்களுக்கு வாய்ப்பே இருக்காது; எனவே, அங்கு பெறுகின்ற வெற்றி நிஜமானதாகவோ, நிலையானதாகவோ இருக்காது. உலகிலேயே இருங்கள் , ஆனால் அதன் பிடிகளிலிருந்து விலகி. இந்த வெற்றியைப் பெற்றால் தான் நீங்கள் பாராட்டுகளுக்கு உரியவர்.