azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You may be sitting on a soft cushioned sofa in a safe, air-conditioned room, but your heart may be burning with unspeakable anxiety, distress and fear. The body is akin to the cart and the mind is the horse. Now people give first place to the cart. The body and its needs are given more importance. This is incorrect. The sages have known the mine of bliss in the human heart, and have discovered methods to develop and excavate it. They have clearly spelt out that if Mother Earth (Bhoo-Matha), one’s physical mother (Nija-Matha), the sacred cow (Go-Matha) and Mother Scriptures (Veda Matha) are revered, nourished and fostered and used as best as they should, then happiness is certain and liberation is assured.(Divine Discourse, Oct 8, 1964).
நீங்கள் சொகுசான சோஃபாவில், பத்திரமாக,குளு குளு அறையில் உட்கார்ந்திருக்கலாம்; ஆனால் உங்கள் இதயம் விவரிக்கமுடியாத கவலை, துயரம் மற்றும் பயத்தால் பற்றி எரிந்து கொண்டு இருக்கக் கூடும். இந்த உடல் வண்டியைப் போன்றது, மனமே அதை இழுக்கும் குதிரை.இன்று மனிதர்கள் வண்டிக்கு முதல் இடத்தைக் கொடுக்கிறார்கள். உடலுக்கும் அதன் தேவைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. இது சரியல்ல. மனித இதயத்தில் உள்ள ஆனந்த சுரங்கத்தை பண்டைய முனிவர்கள் அறிந்திருந்தார்கள்; மேலும் அவற்றை மேம்படுத்தி , தோண்டி எடுக்கும் முறைகளையும் கண்டு பிடித்திருந்தார்கள்.பூமாதா ( இந்த பூமி ), ஈன்றெடுத்த மாதா( தாயார்), கோமாதா( பசு ) மற்றும் வேதமாதா (வேதங்கள்) என்ற நால்வரையும்,போற்றிப் பேணி,பாதுகாத்து, அவர்களை முடிந்த அளவு பயன்படுத்திக் கொண்டால்,பின்னர் ஆனந்தம் நிச்சயம் கிட்டும் மேலும் மோக்ஷம் உறுதி செய்யப்படும் என அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.