azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Human beings are a mixture of Divinity, Demon and Human (Daiva, danava and manava). The wickedness of the ogre can be overcome by the quality of mercy and charity (daya), sympathy and empathy. Pride can be overcome through self-control (dama), detachment, and renunciation; Egoism can be overcome by following the code of conduct (dharma) prescribed by the impartial sages, and by channelizing your instincts and impulses into fruitful action. When these three Gunas are thus sublimated, Manava (human) is transformed into Madhava (God). Make the best use of your Guru. Acquire from Him the skills for winning peace of mind and bliss (shanti and santosha), the Grace of God, the lessons of spiritual practice (Sadhana), and the fruits of good and holy company (sathsang); do not fritter away your energy and time, seeking sensory satisfaction in ungodly company. (Divine Discourse, July 24, 1964.)
மனிதர்கள் தெய்வீக குணம்,அரக்க குணம் மற்றும் மனித குணம் என்ற மூன்றும் கலந்தவர்கள். அரக்க குணத்தின் தீமையை கருணை மற்றும் தயை, பரிவு மற்றும் கரிசனத்தால் வெல்லலாம்.தற்பெருமையை புலனடக்கம், பற்றின்மை மற்றும் துறவு மனப்பாங்கினாலும், அஹங்காரத்தை, பாரபட்சமற்ற பண்டைய முனிவர்கள் வகுத்துள்ள தர்ம நெறிகளைக் கடைப்பிடித்து,உங்களது உணர்ச்சி மற்றும் உந்துதல்களை பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்துவதாலும் வென்றிடலாம். எப்போது இந்த முக்குணங்களும் இவ்வாறு பதப்படுத்தப் படுகின்றவோ, மனிதன் மாதவனாக மாறி விடுகிறான். உங்களது குருவை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவரிடமிருந்து சாந்தி, சந்தோஷங்கள், இறை அருள்,ஆன்மீக சாதனையின் பாடங்கள் ,நல்ல மற்றும் புனிதர்களின் நட்பு வட்டத்தின் பலன்கள் ஆகியவற்றை பெறும் திறன்களை அறிந்து கொள்ளுங்கள்; உங்களது நேரம் மற்றும் சக்தியை, இறை பக்தியற்ற நட்பு வட்டங்களில் புலனின்பங்களைத் தேடுவதில் வீணாக்கி விடாதீர்கள்.