azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

A true devotee will have no eye on the profit of any kind that can be derived from their service. If you quarrel with your spouse and desist from food for a day, that does not count as fasting in the book of God. Also praising one God as great and decrying another is incorrect. Any of these acts reflect the fact that you are unaware of the elementary rules of spiritual discipline. Dhana (wealth) is the currency of the world. Sadhana (Spiritual Practice) is the currency of the spirit. Be an example to others through your conduct - sweet speech, humility, reverence to elders and steadfastness in truth and faith. This way you will influence more people into practicing spirituality; it is better than establishing societies, collecting donations or running temples. The Lord looks for sincerity, simplicity and steady joy in the contemplation of His Name and Form. (Divine Discourse, Aug 19, 1964.)
தங்களது சேவையிலிருந்து எந்த விதமான லாபத்தையும் ஒரு உண்மையான பக்தன் எதிர்பார்க்க மாட்டான்.உங்களது மனைவியிடம் கோபித்துக் கொண்டு,நீங்கள் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால்,அது இறைவனது கணக்கில்,உபவாசமாக கணக்கிடப் பட மாட்டாது. மேலும் ஒரு கடவுளைப் பெரிதாகப் புகழ்ந்து,மற்றொன்றை இழிவாகப் பேசுவது சரியல்ல.இந்த மாதிரியான எந்தச் செயலும்,நீங்கள் ஆன்மீகக் கட்டுப்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதையே பிரதிபலிக்கும். '' தனம் '' உலகியலான பணம். '' சாதனம் ''( ஆன்மீகப் பயிற்சி ), ஆத்மாவின் பணமாகும். இனிமையான பேச்சு, பணிவு, பெரியோர்களிடம் மரியாதை,சத்தியம் மற்றும் நம்பிக்கையில் நிலைகுலையாமை போன்ற உங்களது நடத்தையின் மூலம் பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழுங்கள். இந்த வழியில், நீங்கள் பலரை ஆன்மீக சாதனையில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பீர்கள்; இது கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுவது, சந்தாக்களை சேகரிப்பது அல்லது கோவில்களை நடத்துவது ஆகியவற்றைக் காட்டிலும் மேன்மையானது. இறைவன்,அவனது நாம,ரூப தியானத்தில் உள்ளார்வம், எளிமை மற்றும் நிலையான ஆனந்தம் ஆகியவற்றையே எதிர்பார்க்கிறான்.