azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

In the dark night, the Moon can be seen through its own light only. The Lord is all Love, so He can be seen only through Love. He is Sathyam and Nithyam (Truth and Eternal), and is beyond all falsehood (Mithya). When the dust settles upon the glass of the lantern, it dims its light. Attachment to sensual objects and to the pleasure they give (Vyamoha) is the soot that dims the light of love in your heart. Remove the delusion and the fact that you have become old or diseased, or that you are weak and debilitated. Do not count the years and grieve over advancing age and shudder like cowards afraid of death. Remember, despondency is hell, elation is heaven. Have always some work to do and do it so well that it grants you joy! (Divine Discourse, Sep 3, 1958.)
இருள் நிறைந்த இரவில் சந்திரனை,அதனது ஒளியைக் கொண்டு தான் காண முடியும்.இறைவன் அன்பே வடிவானவன்;அவனை அன்பின் மூலம் தான் காண முடியும்.அவனே சத்யமும், நித்யமும் ஆனவன்;அவன் அனைத்து அசத்தியத்திற்கும் ( மித்யா ) அப்பாற்பட்டவன். லாந்தர் விளக்கின் கண்ணாடியில் புழுதி படியும் போது, அது ஒளியை மங்கலாக்கி விடுகிறது. சிற்றின்பம் தரும் பொருட்கள் மீதுள்ள பற்றுதல் மற்றும் அது தரும் சுகம் எனும் புகைக் கரியே உங்களது இதயத்தின் அன்பு எனும் விளக்கின் ஒளியை மங்கச் செய்கின்றன. மாயையையும்,நீங்கள் வயோதிகர் மற்றும் வியாதியஸ்தர் அல்லது நீங்கள் பலஹீனமானவர்கள், வலுவிழந்தவர்கள் என்ற விஷயத்தையும் மனதிலிருந்து நீக்கி விடுங்கள். கடந்த வருடங்களைக் கணக்கிட்டு, வயோதிகத்தைக் குறித்து துக்கம் கொண்டு, சாவைக் கண்டு குலை நடுங்கும் கோழைகளாக இருக்காதீர்கள். மனச்சோர்வே நரகம், உற்சாகமே சொர்க்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே இருங்கள்; அதைத் திறம்படச் செய்வதன் மூலம் ஆனந்தம் பெறுங்கள் !