azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no use in asking a doctor to advise you about the plans for the building you propose to raise, nor is it wise to ask an engineer to assuage the pain. Go to the proper Guru and learn from him the cardinal principles to guide your lives. Take time to understand, internalize and practice – what is your code of conduct, what does it allow, what does it condemn, why should it be followed? You must evolve your own code of conduct (Athma Dharma) centred on the Divine, appropriate to your situation, which is based on the firm belief on the omnipresence and omnipotence of the Divine Self which pervades the entire Universe.(Divine Discourse, Aug 14, 1964)
நீங்கள் கட்ட இருக்கும் கட்டிடத்திற்கான திட்டங்களைப் பற்றிய ஆலோசனைகளை ஒரு டாக்டரிடம் கேட்பதாலோ, அல்லது ஒரு இஞ்சினீயரை உங்களது வலியைக் குறைக்குமாறு கேட்பதாலோ பயனில்லை. சரியான குருவிடம் சென்று உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான முக்கியக் கோட்பாடுகளைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய தர்மம் என்ன, அவை எதை அனுமதிக்கின்றன,எதை கண்டனம் செய்கின்றன, ஏன் அதைப் பின்பற்ற வேண்டும் -இவைகளைப் பற்றி புரிந்து கொண்டு, அவற்றை கிரஹித்து,நடைமுறைப் படுத்த நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து, அனைத்து சக்திகளும் கொண்டு இந்த பிரபஞ்சம் அனைத்திலும் வியாபித்துள்ள பரம்பொருளின் மீது உள்ள நிலையான நம்பிக்கையின் அடிப்படையில்,உங்களது நிலைமைக்கு ஏற்றவாறு, அந்த தெய்வீகத்தை மையமாகக் கொண்டு, உங்களுக்கே உரித்தான ஆத்ம தர்மத்தை ,நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.