azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Attach yourself to God, then all other attachment for the temporary objects will automatically fall off. At least, you will start seeing worldly objects in the right manner, in the light of their relative reality. It is only when the tiny little ego assumes enormous importance, there is a lot of bother. That is the root of all the travail. In your heart there is the Aatma Rama, the Rama who will confer eternal joy upon you. So repeat the Name of the Lord. The Lord’s Name is the Sun, which can make the lotus in the heart blossom in full. Lord Rama is not merely the son of emperor Dasaratha, but is the Ruler of Dasa Indriyas (the ten senses). The recital of Lord Rama’s Name must become as automatic and as frequent as your very breath. The Lord’s name will endow you with power and all the spiritual capital you need.(Divine Discourse, Sep 2, 1958.)
இறைவனைப் பற்றிக் கொள்ளுங்கள், பின்னர் தாற்காலிகமான பொருட்களின் மீதான அனைத்துப் பற்றுதல்களும் வீழ்ந்து விடும். குறைந்த பட்சம்,உலகியல் பொருட்களை அவைகளின் ஒப்பிடக்கூடிய உண்மை நிலையின் வெளிச்சத்தில் காணத் தொடங்குவீர்கள். மிகச் சிறிய அஹங்காரம் மிகப் பெரிய அளவு முக்கியத்துவத்தைப் பெறும் போது தான், பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அனைத்துத் துயரங்களுக்கும் அதுவே ஆணி வேர்.உங்கள் இதயங்களில் ஆத்மா ராமர் இருந்து விட்டால் அந்த ராமர் உங்களுக்கு நிரந்தரமான ஆனந்தத்தை அளித்திடுவார். இறைநாமம், இதயத் தாமரையை முழுமையாக மலரச் செய்யும் சூரியனைப் போன்றது. ஸ்ரீராமர் வெறும் சக்ரவர்த்தி தசரதரது மகன் மட்டும் அல்ல; பத்து இந்திரியங்களையும் ஆள்பவர். ஸ்ரீராம நாமத்தை ஜபிப்பது உங்களது மூச்சு விடுவதைப் போல தானாகவும், தொடர்ந்தும் இருக்க வேண்டும்.இறைவனது நாமம் உங்களுக்கு வலிமையையும் , உங்களுக்குத் தேவையான அனைத்து ஆன்மீக மூலதனத்தையும் அளிக்கும்.