azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Jul 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no need to fight against the fundamental delusion of body attachment with overwhelming force and argument. Delusion will disappear, if you just sit quietly for one minute and analyse for yourself your own experience with this transient world. Jnana (Wisdom) is not Apraaptha-praapthi, something that is acquired from somewhere, like the gift of money from a donor to a person who did not have it. Wisdom is Praaptha-Praapthi! It is like forgetting about the ten-rupee note that you kept in a book you were reading. You then lent that book to someone and later asked him for a ten-rupee loan. He just gave it to you from the book, which is your own money. Similarly the Guru brings out the treasure of wisdom, from your very own hridaya pustaka - book of your heart!(Divine Discourse, Aug 18, 1964.)
அடிப்படை மாயையான உடல் பற்றிற்கு எதிராக, வலிமை மற்றும் வாதத்துடன் போர் புரியத் தேவையில்லை.இந்த நிலையற்ற உலகத்துடனான உங்களது சொந்த அனுபவத்தை நீங்களே ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து ஆலோசித்தால், மாயை அகன்று விடும். ஞானம் என்பது, பணமற்ற ஒருவருக்கு, தானம் செய்பவரிடமிருந்து கிடைக்கும் பரிசைப் போல, எங்கிருந்தோ, எவரிடமிருந்தோ கிடைக்கும் ஒன்றல்ல ( அப்ராப்த ப்ராப்தி). ஞானம் என்பது '' ப்ராப்த ப்ராப்தி'' ! அது, நீங்கள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில், நீங்களே வைத்து மறந்து விட்ட பத்து ரூபாய் நோட்டைப் போன்றது. அந்தப் புத்தகத்தை நீங்கள் ஒருவருக்கு இரவல் கொடுக்கிறீர்கள்: பின்னர் அவரிடமே சென்று பத்து ரூபாய் கடன் கேட்கிறீர்கள்.உங்களுக்கே சொந்தமான அந்தப் பத்து ரூபாயை, அவர் அந்தப் புத்தகத்திலிருந்து வெறுமனே எடுத்துக் கொடுக்கிறார். அதைப் போலவே, குருவும் ஞானம் என்ற பொக்கிஷத்தை, உங்களது இதயம் எனும் புத்தகத்திலிருந்து வெளிக் கொண்டு வருகிறார் !