azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

It is only through action that devotion can be deepened. Action cleanses the mind and makes it fit for spiritual knowledge. Merely listening to noble thoughts (sravanam) is a thaamasik act. Recapitulation (manana) is Rajasik and complete assimilation (nidhidhyasana) is Saathwik. When you are simply listening, quietly receiving without reflecting or responding, you are dull (thaamasik). When you turn the thought over in your mind, attempting to assimilate it, then you are active (rajasik), and when you are sunk in the sweetness of experience, you enjoy pure exultation (sathwik). That Nidhidhyasana is the fruit of devotion. To overcome obstacles in the spiritual path, you must have both, Sadhana and Sankalpa – Self-effort and Divine Grace.(Divine Discourse, Aug 18, 1964.)
கர்மாவின் மூலம் தான் பக்தியை ஆழ்ந்ததாக்கிக் கொள்ள முடியும். கர்மா மனதைத் தூய்மைப் படுத்தி,ஆன்மீக ஞானத்திற்கு ஏற்றதாக ஆக்குகிறது. சீரிய சிந்தனைகளைக் கேட்கும், வெறும் ஸரவணம் தமஸிகமான செயலாகும். அவற்றை நினைவு கூறும், மனனம், ரஜஸிகமானது; அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிதித்யாஸனம் ஸாத்வீகமானதாகும். வெறுமனே கேட்டு, சிந்திக்காமல் அல்லது பதிலளிக்காமல் இருந்தால் நீங்கள் தமஸிகமானவர்களே. அந்த சிந்தனையை மனதில் அசை போட்டு, அதை உள் ஏற்றுக் கொள்ள முயலும்போது, நீங்கள் ரஜஸிகமாக இருக்கிறீர்கள்.அந்த இனிமையான அனுபவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, நீங்கள் அனுபவிக்கும் தூய ஆனந்தம் ஸாத்வீகமானது.அந்த நிதித்யாஸனமே பக்திக்குக் கிடைக்கும் பலனாகும்.ஆன்மீகப் பாதையின் தடைகளைக் களைய, உங்களுக்கு சுயசாதனை, இறை அருள் என்ற இரண்டும் தேவை.