azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Restlessness (ashanti) is on the rise because of attachment, hate and infatuation. These are born out of ignorance, which causes delusion. Things seen in darkness cannot be clear – a rope is mistaken to be a snake, a piece of glass may be coveted as a diamond. So this indistinct light, that is, this mistaken notion, must go. This can happen only when the methods of discovering the truth are learnt. That is what the Scriptures and the learned ones teach. They guide you to direct your outward seeking senses inward. The inner realm of impulses, instincts, habits, prejudices and attitudes must be cleansed before God can be reflected clear and bright therein.(Divine Discourse, Aug 18, 1964.)
பற்றுதல்,வெறுப்பு மற்றும் மோகத்தின் காரணமாக, அமைதியின்மை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.இவை அனைத்தும் அறியாமையால் தோன்றுபவை, மாயையை உண்டாக்குபவை.இருட்டில் காண்பவை தெளிவாக இருப்பதில்லை -ஒரு கயிறு பாம்பாகத் தவறாகக் காணப்படுகிறதோ, ஒரு கண்ணாடித் துண்டு வைரமாகக் கருதி கவரப்படுகிறது. எனவே, இந்த தெளிவற்ற ஒளி, அதாவது இந்த தவறான எண்ணம் போக வேண்டும்.சத்தியத்தைக் கண்டறியும் முறைகளைக் கற்றறிந்தால் தான் இது சாத்தியம்.இதைத் தான் சாஸ்திரங்களும், சான்றோரும் போதிக்கின்றனர். அவர்கள் ,வெளி உலகை நாடும் புலன்களை உள் நோக்கி வழி நடத்துகின்றனர். இறைவன் தெளிவாகவும், பிரகாசமாகவும் பிரதிபலிக்க வேண்டும் என்றால், நமது அந்தராத்மாவின் உந்துதல்கள், உணர்வுகள், பழக்கங்கள், பாரபட்சங்கள் மற்றும் மனப்பாங்குகள் கண்டிப்பாகத் தூய்மையாக்கப் பட வேண்டும்.