azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The purusha (man) is ‘he who lives in the pura,’ that is the physical body. He who lives in the Universe, which is His body is Purushotthama, the Supreme. A tiny ant creeping over the foot is cognised by your consciousness; that is because, a purusha has consciousness filling the entire body. The Purushotthama too has consciousness filling and activating His entire body, which is the Universe; and hence He is omniscient. The soul is the vyasthi (individual), the samashti (all of Creation) is God. The best reward for the individual (Purusha) is to merge in the Divine (Purushotthama). And the path is through the Knowledge begotten by action and love for God.(Divine Discourse, Aug 17, 1964.)
'' புருஷா '' ( மனிதன் ) என்றால் '' புரத்தில் வசிப்பவர் '' அதாவது, இந்த உடலில் வசிப்பவர் என்று பொருள். ஈடு இணையற்ற '' புருஷோத்தமன் '' ஆன இறைவன் வசிக்கும் இடமே அவனது உடலான இந்த பிரபஞ்சம்.காலில் ஒரு சிறு எறும்பு ஊறினால் கூட, உங்களது உள்ளுணர்வு அதை உணர்கிறது: ஏனெனில் '' புருஷன் '' உங்களது உடலனைத்திலும் உள்ளுணர்வைக் கொண்டிருக்கிறான். '' புருஷோத்தமன் '' ஆன இறைவனும் இந்த பிரபஞ்சமான அவனது உடலனைத்திலும், உள்ளுணர்வை நிரப்பி அதை இயக்கிக் கொண்டு இருக்கிறான் ; எனவே அவன் அனைத்தும் அறிந்தவன். தனி மனிதன் '' வ்யஷ்டி '' என்றால், இந்தப் படைப்பனைத்தும் '' சமஷ்டி'' எனப்படும் இறைவனே. ''புருஷன்'' பெறக்கூடிய மிகச் சிறந்த பரிசு, ''புருஷோத்தமனுடன்'' ஒன்றரக் கலப்பதே. இதற்கான வழி கர்மாவின் மூலம் பெறும் அறிவும், இறைவன் பால் கொள்ளும் அன்பும் ஆகும்.