azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

It is believed that every man has a free will. This is a mistake. It is also believed that it is through the individual's ideas and efforts that many things are accomplished. This is based on misconceptions regarding man's doership and egoism. Strength derived from the Divine alone is true strength. All else is weakness. To realise the Atma, physical prowess is of no avail. It is only by developing the sense of spiritual oneness, that the Atmic Consciousness can be realised. Today the world is plunged in chaos and conflict because this feeling of oneness has been lost. Man engages himself in strenuous efforts to achieve worldly comforts. But he does not make even a minute fraction of such efforts to meditate on God. How much greater happiness would he enjoy if he were to devote even a few moments to thoughts of God!( Divine Discourse, May 30, 1990.)
ஒவ்வொரு மனிதனுக்கும் செயலாற்றும் சுதந்திரம் இருப்பதாக நம்பப் படுகிறது. இது தவறு. மேலும், தனி மனிதரது சிந்தனைகள் மற்றும் முயற்சிகளின் மூலம் பல காரியங்கள் சாதிக்கப் படுகின்றன எனவும் நம்பப்படுகிறது. இது, மனித செயல் மற்றும் அஹங்காரத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது.தெய்வீகத்தின் மூலம் பெறப்படும் சக்தியே உண்மையான சக்தி.பிற அனைத்தும் பலவீனமே. ஆத்மாவை உணர்வதற்கு உடல் திறனால் பலனில்லை. ஆன்மீக ஒருமையை வளர்த்துக் கொள்வதால் மட்டுமே,ஆத்ம உணர்வை அடைய முடியும்.இன்று உலகம், இந்த ஒருமை உணர்வை இழந்து விட்டதால் தான் சண்டை, சச்சரவுகளில் ஆழ்ந்துள்ளது. உலகியலான சௌகரியங்களை அடைவதற்கு மனிதன் தன்னை கடும் முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறான்.ஆனால், இதில் ஒரு சிறு அளவு முயற்சியைக் கூட ,இறைவனைப் பற்றி தியானிப்பதில் அவன் செலவிடுவதில்லை.இறைச் சிந்தனைகளுக்காக சில நொடிகளைச் செலவிட்டால் கூட அவன் மிகச் சிறந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.