azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The holy culture of this ancient land has been spoilt by just one impurity; intolerance of another's success, prosperity or progress. If you cannot help another, at least avoid doing harm or causing pain. That itself is a great service. What right have you to find fault with or to talk evil of another? When you say that nothing can ever happen on earth without His Will, why get annoyed or angry? Your duty is to cleanse yourself and engage in your own inner purification. That endeavor will bring you the cooperation of all good men and you will find strength and joy welling up within you.(Divine Discourse, Aug 2, 1958.)
நமது பண்டைய தேசத்தின் கலாசாரம் ஒரே ஒரு அசுத்தத்தால் கெட்டுள்ளது: அடுத்தவரது வெற்றி, செல்வம் அல்லது உயர்வை சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பது. உங்களால் பிறருக்கு உதவ முடியாமல் போனால் பரவாயில்லை: குறைந்த பட்சம் அவருக்கு தீங்கோ அல்லது பாதகமோ ஏற்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.அதுவே மிகச் சிறந்த சேவை. பிறரிடம் குறை காணவோ அல்லது பிறரைப் பற்றித் தீமையாகப் பேசுவதற்கோ, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? இந்த உலகில் இறைவனது ஸங்கல்பம் இன்றி எதுவும், எப்போதும் நிகழ இயலாது என நீங்கள் கூறும் போது, எதற்காகக் கோபமோ அல்லது ஆத்திரமோ படுகிறீர்கள்? உங்களைத் துப்புரவாக்கிக் கொண்டு, அந்தராத்ம தூய்மைக்காகப் பாடுபடுவது உங்களது கடமை. அந்த முயற்சி அனைத்து நல்ல மனிதரின் ஒத்துழைப்பையும் பெற்றுத் தரும்; மேலும் உங்களுள் ஆனந்தம் ஊற்றெடுப்பதை நீங்கள் உணருவீர்கள்.