azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

When the senses are brought under control by the mind, the mind itself ceases to function; it disappears as it were. Then man experiences a profound silence. That stillness resulting from the absence of the mind is true Knowledge (Jnana). This knowledge cannot be acquired by intellectual ability or mental agility, nor by following an example. It is sui generis. Consider the ashes which cover a burning charcoal or the moss which covers a sheet of water. The ashes have come from the charcoal. The moss has originated from the water. The cataract that dims the vision of the eye, wherefrom has it come? From the eye itself! When the screen that blinds the vision is removed, the true Self will be seen in its real form. Atma Jnana is not obtainable through books, preceptors or even Paramatma (the Supreme Self). You are yourself the Paramatma, the Jnana, the Atma.(Divine Discourse, May 30, 1990.)
மனம் புலன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், மனம் செயலிழந்து விடுகிறது: அது மறைந்து விடுகிறது என்றே சொல்லலாம். பின்னர் மனிதன் ஒரு ஆழ்ந்த அமைதியை உணருகிறான்.மனமற்ற அந்த அமைதியே உண்மையான ஞானம். இந்த ஞானத்தை புத்திசாலித் தனத்தாலோ, மனக்கூர்மையாலா அல்லது ஒருவரைப் பின்பற்றுவதாலோ பெற முடியாது. அது தனித் தன்மையானது. கரியின் மீது படிந்துள்ள சாம்பல் அல்லது நீர்ப்பரப்பை மூடியுள்ள பாசியை எடுத்துக் கொள்ளுங்கள். சாம்பல் கரியிலிருந்து வந்ததே;பாசியும் நீரிலிருந்து வந்ததே. கண் பார்வையை மங்கச் செய்யும் கண் புரை (காட்ராக்ட்) எங்கிருந்து வந்தது? கண்ணிலிருந்தே அல்லவா ! பார்வையை மறைக்கும் திரையை விலக்கியவுடன் உண்மையான ஆத்மாவை அதன் சுயமான நிலையில் காண முடியும். ஆத்ம ஞானத்தை புத்தகங்களிலிருந்தோ, குருமார்கள் ஏன் பரமாத்மாவிடமிருந்தோ கூடப் பெற முடியாது. நீங்களே பரமாத்மா, ஞானம், ஆத்மா.