azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

All investigations associated with the mind are delusions of various sorts. They are subjective. All that people do - seeing, hearing, experiencing and doing, are all mental delusions caused by association with the body. The mind cannot keep still even for a moment, without thinking about something or the other. Hence the mind is dependent on the body. All that the mind experiences, relates to the world that is made of the five elements. The mind sees the world through the eyes, hears through the ears. The mind has no form of its own; it is Maya (delusion). It is desire. It is Nature. It is ignorance (Avidya). Delusion is its very nature. It is extremely difficult to understand the pure and immutable Divine Soul (Atma) through an instrument subject to delusions.(Divine Discourse, May 30, 1990.)
மனதை ஒட்டிய ஆராய்ச்சிகள் அனைத்தும் பல விதமான மாயையே. அவை தனிமனித சாற்புடயவை. மனிதர்கள் செய்யும் யாவும் - காண்பது, கேட்பது, அனுபவிப்பது, செய்வது என்ற அனைத்தும் உடலோடு சம்பந்தப்பட்ட மன மாயைகளே. ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திக்காமல் மனதால் அசையாமல் ஒரு கணம் கூட இருக்க முடியாது. எனவே மனம் உடலைச் சார்ந்தது. மனம் அனுபவிக்கின்ற அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகிற்கு சம்பந்தப் பட்டவை. மனம் இந்த உலகை கண்கள் மூலம் பார்க்கிறது, காதுகள் மூலம் கேட்கிறது. மனதிற்கு என்று ஒரு உருவமும் கிடையாது: அதுவே மாயைதான்.அதுவே ஆசைகள்: அதுவே இயற்கை. அதுவே அவித்யா அல்லது அறியாமை.மாயையே அதன் தன்மை. மாயைக்கு உள்ளான கருவி மூலம் தூய்மையான, மாற்றமற்ற தெய்வீக ஆத்மாவைப் புரிந்து கொள்வது என்பது மிக மிகக் கடினமானதாகும்.