azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

To know the Indweller (Kshetrajna) you have to acquire the Supreme Knowledge (Jnana). This transcends every other kind of knowledge which is related to the physical and the phenomenal. No one can understand the Divine Self (Atma) through worldly knowledge. You need a diamond to cut a diamond. To understand the Divine Soul (Atma), you have to acquire Knowledge of the Spirit (Atmajnana). All the knowledge gathered by the analysis of physical objects or through the senses is only a form of ignorance. It has three elements: What is known, what is to be known and who is the knower. These three are aspects of the mind. Only that is Jnana which is known when the mind is eliminated. Atma and Jnana are one, though called by different names. True Awareness is Jnana.(Divine Discourse, May 30, 1990.)
நம்முள் உறையும் இறைவனை ( க்ஷேத்ரக்ஞன்) அறிய நீங்கள் ஞானத்தைப் பெற வேண்டும். உலகியலான,பொருட்களைப் பற்றிய எல்லா விதமான அறிவிற்கும் அப்பாற்பட்டது இந்த ஞானம். உலகியலான அறிவினால், ஒருவரும் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. வைரத்தை அறுப்பதற்கு உங்களுக்கு மற்றொரு வைரம் தேவை. ஆத்மாவைப் புரிந்து கொள்ள, நீங்கள் ஆத்ம ஞானத்தைப் பெற வேண்டும். பொருட்களின் ஆராய்ச்சி மற்றும் புலன்களின் மூலம் பெறும் அனைத்து அறிவும் ஒருவிதமான அஞ்ஞானமே. இதில் மூன்று அம்சங்கள் உள்ளன: அறிந்தது எது, அறிந்து கொள்ள வேண்டியது எது மற்றும் அறிந்து கொள்பவர் யார். இந்த மூன்றும் மனதின் அம்சங்கள்.மனது அழிக்கப் படும்போது பெறுவதே ஞானமாகும். வெவ்வேறான பெயர்களால் அழைக்கப் பட்டாலும், ஞானமும்,ஆத்மாவும் ஒன்றே. உண்மையான விழிப்புணர்வே ஞானமாகும்.